மும்பையின் மேற்கு பகுதியில் வீட்டு வேலை செய்யும் பெண்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். கொரோனா நேரத்தில் அதிகமான வீட்டுவேலைக்கார பெண்கள் ஊரை காலி செய்துவிட்டு சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர். இதனால் அதிகமானோர் வீட்டு வேலைக்கு ஆள் கிடைக்காமல் கிடைத்த வேலைக்காரர்களைப் பற்றி சரியாக விசாரிக்காமல் வேலைக்கு அமர்த்துகின்றனர். அவர்கள் வேலைக்கு சேர்ந்த சில நாட்களில் வீட்டு உரிமையாளரின் நம்பிக்கையை பெற்று உடனே கிடைக்கும் பொருட்களை திருடிவிட்டு தப்பிச்சென்றுவிடும் சம்பவங்கள் அதிக அளவில் நடக்கிறது. வனிதா
மும்பையில் அது போன்ற ஒரு வீட்டு வேலைக்கார பெண் கைது செய்யப்பட்டுள்ளார். வனிதா கெய்க்வாட் என்ற பெண் மேற்கு மும்பையில் மிகவும் பணக்காரர்கள் வசிக்கும் ஜுகு பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் வசிக்கும் தீபிகா கங்குலி என்பவரின் வீட்டில் வேலைக்கு சேர்ந்தார். அவர் பணிக்கு சேர்ந்த சில நாட்களிலேயே அங்கு இருந்த 10 ஆயிரம் பணம் மற்றும் 2,500 அமெரிக்க டாலர்களை எடுத்துக்கொண்டு தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து வீட்டு உரிமையாளர் போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். அப்பெண் வேலை செய்த வீடு இருந்த கட்டடத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு இருந்தது. இதனால் திருடிய பெண்ணின் புகைப்படம் எளிதில் சிக்கியது. ஆரம்பத்தில் அப்பெண் கொடுத்திருந்த முகவரியில் சென்று பார்த்த போது அந்த வீட்டை காலி செய்திருந்தார்.
இது குறித்து ஜுகு போலீஸ் அதிகாரி சசிகாந்த் பவார் கூறுகையில், ``வனிதா பொதுவாக அடுக்கு மாடிகுடியிருப்புக்களில் சென்று அங்கு பணியாற்றும் வாட்ச்மென்களை பார்த்து யாருக்காவது வீட்டுவேலைக்கு ஆட்கள் தேவைப்பட்டால் சொல்லும் படி கூறிவிட்டு தனது போன் நம்பரையும் கொடுத்துவிட்டு வருவார். அப்படி யாராவது வாட்ச்மென் மூலம் வனிதாவை வேலைக்கு அழைத்தால், உடனே வேலையில் சேர்ந்துவிடுவார். ஆனால் முகவரி ஆவணங்களை கொடுக்கும்படி கேட்டால் சமீபத்தில் தனது வீட்டை மாநகராட்சி அதிகாரிகள் இடித்துவிட்டனர். அதில் ஆவணங்கள் எல்லாம் வீணாகிவிட்டது. சில நாட்களில் ஏற்பாடு செய்து கொடுப்பதாக கூறுவார். வீட்டு உரிமையாளரும் விரைவில் ஆவணங்களை கொண்டு வந்து கொடுக்கும்படி கூறுவதுண்டு. கைது
வீட்டு உரிமையாளர் கொடுக்கும் நேரத்திற்குள் அவரின் நம்பிக்கையை பெற்று அங்கு இருக்கும் பொருட்களை திருடிச்சென்றுவிடுவது வழக்கம். அதோடு அடிக்கடி தனது வீட்டை மாற்றிக்கொண்டே இருப்பார். இதனால் அவரை கண்டுபிடிப்பதில் சிக்கல் இருந்து வந்தது. இறுதியில் விக்ரோலியில் உள்ள வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டார்” என்று தெரிவித்தார். 2003-ம் ஆண்டிலிருந்து இது வரை 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் வேலை செய்து அங்கு திருடி பிடிபட்டும் இருக்கிறார். அதிகமான வழக்குகளில் குறுகிய கால சிறைதண்டனையே வழக்கப்படுவது வழக்கம். நீதிபதியிடம் வனிதா தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு வயிற்று பிழைப்புக்காக இதனை செய்துவிட்டதாக கூறி நாடகமாடிவிடுவது வழக்கம். இதனால் நீதிபதியும் அவரது நிலையை பார்த்து குறுகிய கால சிறை தண்டனை கொடுப்பது வழக்கம். போலீஸார் வனிதாவின் வீட்டை சோதனை செய்து பார்த்த போதுதான் வீடு முழுக்க கோர்ட் ஆவணங்களாக கிடந்தது. அடிக்கடி வனிதா தனது பெயரையும் மாற்றிக்கொண்டு இது போன்ற திருட்டு காரியங்களில் ஈடுபடுவதுண்டு. சூரத்திலும் இரண்டு வீடுகளில் திருடி இருப்பது விசாரணையில் தெரிய வந்ததுள்ளது.
http://dlvr.it/S1zsFS
Friday, 18 June 2021
Home »
» மும்பை: வீட்டு வேலை, திருட்டு, எஸ்கேப்! - 18 ஆண்டுகளில் 50 வீடுகளில் கைவரிசை காட்டிய பெண் கைது