தமிழ்நாட்டில் முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். கோவை, விழுப்புரம் உள்ளிட்ட 24 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நாகை மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த பிரவீன் நாயர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநராக நியமனம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, வேளாண் துறை இயக்குநராக நியமனம் வேலூர் ஆட்சியராக இருந்த சண்முக சுந்தரம், கூட்டுறவுத்துறை பதிவாளராகவும் நியமனம் திருப்பத்தூர் ஆட்சியரான சிவனருள், பதிவுத்துறை ஐ.ஜி.ஆக நியமனம் திருவள்ளூர் ஆட்சியராக இருந்த பொன்னையா, நகராட்சி நிர்வாக இயக்குநராக நியமனம் சுற்றுலாத்துறை இயக்குநராக திருவண்ணாமலை ஆட்சியர் சந்தீப் நந்தூரி நியமனம் சமூக நலத்துறை இயக்குநராக அரியலூர் ஆட்சியர் ரத்னா நியமனம் ,தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய மேலாண் இயக்குநராக தஞ்சை ஆட்சியராக இருந்த கோவிந்தராவ் நியமனம் தொழில்கல்வி இயக்குநராக லஷ்மிபிரியா நியமனம் ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவராக லதா நியமனம் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை ஆணையாளராக வள்ளலார் நியமனம் ஆவின் மேலாண் இயக்குநராக கந்தசாமி நியமனம் சிஎம்டிஏ உறுப்பினர் செயலராக அன்சுல் மிஸ்ரா நியமனம் மாநில வளர்ச்சி கொள்கை குழு உறுப்பினர் செயலாளராக பாஸ்கர பாண்டியன் நியமனம் நில அளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குநராக வினய் நியமனம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை இயக்குநராக ஜெயகாந்தன் நியமனம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
http://dlvr.it/S1gJvx
Monday, 14 June 2021
Home »
» 24 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்: தமிழ்நாடு அரசு உத்தரவு