விவசாயி உள்ளிட்ட அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி பொதுமக்களிடம் தத்ரூபமாக நடித்து காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்திய நாகை காவல் ஆய்வாளர். கொரோனா 2,வது அலையில் தமிழக கிராமங்கள் அதிக பாதிப்பை சந்தித்து வருகின்றன. குறிப்பாக கொரோனா எனும் கொடிய நோய் ஆயிரக்கணக்கான மக்களை கொத்துக்கொத்தாக கொன்று குவித்து வருகிறது. இந்த தொற்றிலிருந்து ஒவ்வொருவரும் தங்களை தற்காத்துக்கொள்ள மாஸ்க் அணிவது கட்டாயம் என அரசு அறிவுறுத்தினாலும் அதனை பொதுமக்கள் சரிவர கடைபிடிப்பதில்லை. இதுபோன்ற அறிவுறுத்தல்களை கடைபிடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நாகை நகர காவல் நிலையத்தில் பணியாற்றும் ஆய்வாளர் பெரியசாமி நாகையில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது காக்கி சட்டையை கழற்றிவிட்டு விவசாயி வேடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆய்வாளர் பெரியசாமி, மாஸ்க் அணியாதபோது கொரோனா நம்மை எவ்வாறு கவ்விக் கொள்கிறது என தரையில் விழுந்து தத்துரூபமாக பொதுமக்கள் மத்தியில் நடித்து காட்டினார். கொரோனா விழிப்புணர்வு பாடலுடன் தத்துரூபமாக, ஆய்வாளர் நடித்துக் காட்டிய போது, இறந்து போகும் காட்சி அனைவரையும் ஒருசில நிமிடம் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. காவலர் என்றால் கடுமை காட்டுபவர் என்ற கூற்றை உடைத்தெறிந்து, மக்களின் உயிர் காக்க தன்னலம் பாராமல் சமூக அக்கறையுடன் ஆய்வாளர் பெரியசாமி நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியை கண்டு பொதுமக்கள், தாங்கள் அனைவரும் கண்டிப்புடன் ஊரடங்கை கடைபிடிப்போம் எனக் கூறி அவரை பாராட்டிச் சென்றனர்.
http://dlvr.it/S0vbml
Wednesday, 2 June 2021
Home »
» விவசாயியும் மாஸ்க் போடுங்க’: தத்ரூபமாக நடித்துக்காட்டி விழிப்புணர்வு செய்த நாகை காவலர்