“நான் தனியார் பள்ளி ஆசிரியை. என் கணவர் கூலித் தொழிலாளி. எங்கள் வீட்டில், 5 பேர் உள்ளனர். எங்களுக்கு பொருளுதவி, வேலைவாய்ப்பு தேவை” – சுமதி, ராணிப்பேட்டை “எங்கள் வீட்டில் கொரோனா காலத்தில் யாருக்கும் வேலை இல்லை. இரண்டரை வயதில் குழந்தை உள்ளது. ஐ.டி படித்திருக்கிறேன். படிப்புக்கேற்ற வேலை கிடைத்தால் உதவியாக இருக்கும்” – ஐஸ்வர்யா, சிதம்பரம் “நான் ஆட்டோ ஓட்டுனர். வீட்டில், நான்கு பேர் உள்ளனர். அத்தியாவசிய பொருட்கள் தேவைப்படுகிறது” – வேலு, திருவள்ளூர் “எங்களுக்கு குடும்ப அட்டை இல்லை. வீட்டில் 5 பேர் இருக்கிறோம். மாமியார் மாற்றுத்திறனாளி. எங்களுக்கு, மளிகை சாமான்கள் தேவை” – இந்துமதி, சென்னை “அறக்கட்டளை மூலம் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறோம். மேலும் உதவி செய்ய பொருளுதவி தேவை” – கோபி, கள்ளக்குறிச்சி “என் தந்தை செருப்பு தைக்கும் தொழிலாளி. தாய் இல்லை, கால் உடைந்த நிலையில் வேலை இல்லை. வீட்டு வாடகை கட்ட முடியவில்லை. வாடகை தொகை, 5000 ரூபாய்” – கேசவராஜ், சென்னை - புதிய தலைமுறையின் 'துளிர்க்கும் நம்பிக்கை' உதவி மையத்துக்கு வந்துகொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான அழைப்புகளில் சமீபத்தில் வந்த கோரிக்கைகள் இவை. இந்த எளியவர்களை கரை சேர்க்க உதவும் வகையில் எங்களுடன் நீங்கள் இணைய விரும்பினால் 9150734555, 9150737555 என்ற எண்களைத் தொடர்புகொள்ளுங்கள். கொரோனா பேரிடரில் உதவி தேவைப்படுவோருக்கு நீங்கள் அளிக்கும் உதவிகளை சரியாக சென்று சேர்வதற்கு உறுதியான அத்தனை பணிகளையும் களத்தில் இருந்து நம் குழுவினர் செய்து வருகிறார்கள். உதவி நாடுவோருக்கு தங்களால் இயன்றதை தொடர்ந்து செய்துவரும் நல் உள்ளங்களுக்கு நன்றியும் அன்பும். இந்த முன்னெடுப்பு குறித்து விரிவாக அறிய > எளியவர்களின் இருள் நீங்க... 'புதிய தலைமுறை' முன்னெடுப்பில் 'துளிர்க்கும் நம்பிக்கை'
http://dlvr.it/S1l0BL
Tuesday, 15 June 2021
Home »
» துளிர்க்கும் நம்பிக்கை: "மாற்றுத்திறனாளிக்கு உதவி வேண்டும்" - உதவிக்கரம் கோரும் குரல்