மகாராஷ்டிராவில் தற்போது எப்போதும் இல்லாத வகையில் இரு வேறு கொள்கையுடைய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. எப்போதுமே சிவசேனா பா.ஜ.க-வின் கூட்டணி கட்சியாகவே இருந்து வந்துள்ளது. ஆனால் கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு முதல்வர் பதவி தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பா.ஜ.க மற்றும் சிவசேனா இடையே மோதல் போக்கு நிலவியது. அதில் இடையில் புகுந்த சரத்பவார் உத்தவ் தாக்கரேவை, தங்கள் பக்கம் இழுத்து அவரை முதல்வராக்க ஆதரவுக் கொடுத்து ஆட்சியில் அமர்த்தியுள்ளார். அவர்களுடன் காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்துள்ளது. இது கொள்கையற்ற கூட்டணியாகவே கருதப்படுகிறது. இந்த கூட்டணி ஆட்சியைக் கவிழ்க்க பா.ஜ.க ஆபரேசன் தாமரை என்ற பெயரில் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டு மண்ணைக் கவ்வியது.சரத்பவார்-பட்னாவிஸ் சந்திப்பு
இந்நிலையில் திடீர் திருப்பமாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை பா.ஜ.க-வின் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே சரத்பவாரை தங்களது பக்கம் இழுத்து மகாராஷ்டிராவில் ஆட்சியை அமைக்க பா.ஜ.க இதற்கு முன்பு மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. தற்போது மீண்டும் சந்தித்திருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் இதற்கு பட்னாவிஸ் விளக்கம் அளித்திருக்கிறார். தனது டிவிட்டர் பக்கத்தில் இது தொடர்பாக கொடுத்துள்ள விளக்கத்தில், சரத்பவாருக்கு சமீபத்தில் ஆபரேசன் செய்யப்பட்டது. அதனால் அவரை சந்தித்து உடல் நலம் விசாரித்தேன், என்று குறிப்பிட்டு இருவரும் சந்தித்த படத்தையும் பதிவிட்டுள்ளார்.
Also Read: `ஒரு திட்டம் அறிவித்துவிட்டால் போதும், அது நிறைவேறும் வரை மோடி உறங்கமாட்டார்' - கலகலத்த பட்நாவிஸ்!
இச்சந்திப்பு குறித்து சிவசேனா செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவுத் கூறுகையில், `சரத்பவார் எப்படி எதிர்க்கட்சி தலைவராக செயல்பட வேண்டும் என்பது குறித்து, தேவேந்திர பட்னாவிஸுக்கு ஆலோசனை கொடுத்திருப்பார்' என்று தெரிவித்தார். மேலும்,` இந்த சந்திப்பில் எந்த வித அரசியலும் இல்லை. ஆபரேசன் தாமரையை மறந்துவிடுங்கள். அது இங்கேயோ அல்லது மேற்கு வங்கத்திலோ எடுபடாது. அப்படி இருக்கும் போது ஏன் ஒவ்வொரு சந்திப்பையும் அரசியலாக்குகிறீர்கள்' என்றும் அவர் தெரிவித்தார். தேவேந்திர பட்னாவிஸே இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று தெரிவித்துள்ளதையும் சஞ்சய் ராவுத் சுட்டிக்காட்டினார்.
Also Read: மகாராஷ்டிரா: சரத் பவார் கலந்துகொண்ட விவசாயிகள் பேரணி; புறக்கணித்த உத்தவ் தாக்கரே! - என்ன நடந்தது?
மகாராஷ்டிரா அரசு மராத்தா இன மக்களுக்கு 13 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றி இருந்தது. ஆனால் அதனை சட்டவிரோதம் என்று கூறி சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துவிட்டது. அதனால் பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்களுக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டில் மராத்தாக்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் ஒதுக்கீடு வழங்க மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது.
அதேசமயம் மராத்தா இட ஒதுக்கீடு பிரச்னையை மகாராஷ்டிரா அரசு சரியாக கையாளவில்லை என்று கூறி பா.ஜ.க வரும் 5-ம் தேதி மாநிலம் தழுவிய அளவில் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்தும் சரத்பவாருடன் பட்னாவிஸ் ஆலோசனை நடத்தி இருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது.
http://dlvr.it/S0sYFq
Wednesday, 2 June 2021
Home »
» மகாராஷ்டிரா: சரத்பவாரை சந்தித்த பாஜக-வின் தேவேந்திர பட்னாவிஸ் - மீண்டும் ஆபரேசன் தாமரையா?