கேரள மாநிலம் கொல்லம் சாஸ்தாங்கோட்டையைச் சேர்ந்தவர் கிரண்குமார். இவர் மோட்டார் வெகிக்கிள் இன்ஸ்பெக்டராக இருந்துவந்தார். இவருக்கும் கொல்லம் நிலமேடு பகுதியைச் சேர்ந்த விஸ்மயா என்ற பெண்ணுக்கும் கடந்த ஆண்டு மே 31ம் தேதி திருமணம் நடந்தது. இந்த நிலையில் கடந்த திங்கள்கிழமை அதிகாலை நேரத்தில் கணவன் வீட்டில் உள்ள பாத்ரூமில் தூக்கில் தொங்கி இறந்த நிலையில் விஸ்மயாவின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து பெண்கள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. கிரண்குமாருக்கு வரதட்சணையாக கொடுத்த காரின் விலை மதிப்பு குறைவு என்பதால் அடிக்கடி விஸ்மயாவை டார்ச்சர் செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.வரதட்சணை பிரச்னையால் மரணமடைந்த விஸ்மயா
விஸ்மயா - கிரண்குமார் திருமணத்தின்போது வரதட்சணையாக நூறு பவுன் நகை, 1.20 ஏக்கர் நிலம், சுமார் பத்துலட்சம் ரூபாய் மதிப்புள்ள கார் ஆகியவை கொடுத்துள்ளனர். கார் வேண்டாம் அதற்கு பதில் பணம் தாருங்கள் என கிரண்குமார் கேட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், லோன் எடுத்து வரதட்சணை கொடுத்ததால் பணம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டதாக விஸ்மயாவின் தந்தை திரிவிக்கிரமன் நாயர் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் விஸ்மயா தனது உறவினர்களுக்கு வாட்ஸ் அப் சாட் மூலம் அனுப்பிய மெசேஜ் வெளியாகியுள்ளது.
விஸ்மயா வாட்ஸ் அப் சாட்டில், "கோபம் வந்தால் அவர் என்னை அடிப்பார். அவருக்கு கொடுத்த கார் போதாது என என்னையும், அப்பாவையும் திட்டினார். கொஞ்சம் நேரம் பொறுத்துப்பார்த்தேன், நிறுத்தவிலை. எனவே அறையைவிட்டு வெளியேற முயன்ற என்னை பிடிச்சு இழுத்து பலமுறை தாக்கினார். அடிபொறுக்காமல் கீழே விழுந்த என்னை காலால் மிதித்து, முகத்தில் காலை வைத்து அழுத்தினார்" என அந்த வாட்ஸ் அப் சாட்டில் கூறியிருந்தார். மேலும் அடிபட்டதால் ஏற்பட்ட காயத்தின் புகைப்படத்தையும் வாட்ஸ் அப்பில் பகிர்ந்திருந்தார். harassment
கிரண்குமாருக்கு வரதட்சணையாக ஹோண்டா அமேஸ் கார் கொடுத்ததாக கூறப்படுகிறது. அதைவிட உயர்ந்த ரக கார் வேண்டும் அல்லது பணம் வேண்டும் எனக்கூறி டார்ச்சர் செய்யததாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் கிரண்குமார் கைது செய்யப்பட்டுளார். அவரது பெற்றோரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. கிரண்குமார் கைதைத் தொடர்ந்து மோட்டார் வெகிக்கிள் இன்ஸ்பெக்டர் பதவியில் இருந்து கிரண்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கிரண்குமார் பலமுறை விஸ்மயாவை தாக்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே வரதட்சணை கொடுமையால் விஸ்மயா இறந்ததாகவும். அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் உறவினர்கள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், "விஸ்மயாவை அவரது கணவர் தாக்கியதால் அவர் உடலில் காயங்கள் ஏற்பட்டிருந்தன. அதை விஸ்மயா வாட்ஸ் அப் மூலம் உறவினர்களுக்கு அனுப்பிக்கொடுத்திருந்தார். தொடர்ந்து கணவர் தாக்குவதாகத் தெரிவித்திருந்தார். இதுபற்றி கிரண்குமாரிடம் விசாரித்தபோது, கடந்த திங்கட்கிழமை இருவருக்குள்ளும் வாக்குவாதம் நடந்துள்ளதாகத் தெரிவித்தார். மேலும் வாக்குவாதம் முற்றியதால் விஸ்மயா அழுதுகொண்டே பாத்ரூமிற்கு சென்றதாகவும், சாதாரணமாக பாத்ரூமிற்கு போவது போன்று அவர் செல்கிறார் என நினைத்ததாகவும் அவர் கூறினார். ஆனால் 20 நிமிடங்கள் கடந்த பிறகும் அவர் வெளியே வரவில்லை. இதைத்தொடர்ந்து கதவை தட்டியபிறகும் அவர் திறக்கவில்லை. கதவை உடைத்துக்கொண்டு சென்று பார்த்தபோது தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தார் என கிரண்குமார் தெரிவிக்கிறார். போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வந்த பிறகுதான் மரணத்திற்கான முழு விவரமும் கூறமுடியும்" என்றனர்.
வரதட்சணையாக கொடுத்த காரின் மதிப்பு குறைவு என்பதால் மனைவியை கொடுமைப்படுத்தி, கடைசியில் மரணம் வரை சென்ற சம்பவம் கேரளத்தை உலுக்கியுள்ளது.
http://dlvr.it/S2HC9q
Wednesday, 23 June 2021
Home »
» கேரளா: வரதட்சணையாக கொடுத்த காரின் மதிப்பு குறைவு; இறந்துகிடந்த மனைவி; நடந்தது என்ன?