மும்பையில் மாநகராட்சி நிர்வாகம் காட்கோபரில் ராஜாவாடி என்ற மருத்துவமனையை நடத்தி வருகிறது. இம்மருத்துவமனைக்கு கிழக்கு புறநகர் பகுதியை சேர்ந்த ஏழை நோயாளிகள் அதிக அளவில் வருவதுண்டு. இம்மருத்துவமனையில் குர்லாவை சேர்ந்த ஸ்ரீனிவாஸ் யெல்லப்பா(24) என்ற நோயாளி கல்லீரல் தொடர்பான பிரச்னைக்காக சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு இருந்தார். மயக்க நிலையில் இருந்த அவரை ஊழியர்கள் கீழ் தளத்தில் உள்ள அவசர சிகிச்சை பிரிவு வார்டில் சேர்த்திருந்தனர். அவர் மயக்க நிலையில் இருந்த போது உள்ளே வந்த எலிகள் அவரது கண்ணிற்கு கீழே கடித்து குதறின. அதிர்ஷ்டவமாக இதில் எலிகள் கண்ணை கடிக்கவில்லை. கண்ணை கடித்திருந்தால் கண் பார்வையே பறிபோயிருக்கும்.
எலி கடித்த இடத்தில் டாக்டர்கள் மருந்து வைத்து கட்டி இருந்தனர். நோயாளியின் சகோதரி அதனை பார்த்து, என்ன ஆனது என்று கேட்டபோது, `எலி கடித்திருக்கலாம்’ என்று ஊழியர்கள் சர்வ சாதாரணமாக தெரிவித்ததாக தெரிகிறது. தற்போது நோயாளியின் உடல் நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. கண்ணிற்கு எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று மருத்துவமனையின் டீன் டாக்டர் வித்யா தாக்குர் தெரிவித்தார். ``நோயாளி சேர்க்கப்பட்டு இருந்த வார்டு கீழ் தளத்தில் இருக்கிறது. வார்டுக்கு வெளியில் உள்ள பகுதியில் பொதுமக்கள் குப்பைகளை போட்டுள்ளனர். இதனால் எலிகள் வந்திருக்கலாம்” என்று தெரிவித்தார்.srinivas in hospital
இச்சம்பவம் குறித்து மேயர் கிஷோரி அளித்த பேட்டியில், ``எலிகள் கடித்த நோயாளியின் நிலை சரியில்லை. இச்சம்பவம் நடந்திருக்ககூடாது. இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இச்சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார். மருத்துவமனையில் நோயாளியை எலிகள் கடித்து குதறிய சம்பவம் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதற்கு முன்பு மும்பை காந்திவலியில் உள்ள பாபாசாஹேப் அம்பேத்கர் மருத்துவமனையில் 3 நோயாளிகளை எலிகள் கடித்து குதறின. அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 2 லட்சம் ரூபாய் வழங்க மனித உரிமை கமிஷன் உத்தரவிட்டது. மும்பையில் மாநகராட்சி நிர்வாகம் லோக்மான்ய திலக் மருத்துவமனை, கே.இ.எம். உட்பட சில மருத்துவமனைகளை சொந்தமாக நடந்தி வருகிறது.
http://dlvr.it/S2GlVc
Wednesday, 23 June 2021
Home »
» மும்பை மாநகராட்சி மருத்துவமனையில் நோயாளியை கடித்து குதறிய எலிகள்! - அதிர்ச்சி சம்பவம்