மும்பையில் கொரோனாவின் தாக்கம் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா இறப்புகள் மறைக்கப்படுவதாக பாஜக குற்றம்சாட்டி வருகிறது. எதிர்க்கட்சித் தலைவர் தேவேந்திர பட்நாவிஸ் இரண்டு நாட்களுக்கு முன் அளித்திருந்த பேட்டியில், மும்பையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறைத்து காட்டப்படுகிறது. கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புக்களில் 40 சதவீதத்தை வேறு நோய்களால் இறந்ததாக கணக்கு காட்டப்படுகிறது என்றும், மாநிலம் முழுவதும் கிராமங்களில் கொரோனா உயிரிழப்புகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதே இல்லை என்று குற்றம் சாட்டியிருந்தார். Kishori
இதற்கு பதிலளித்துள்ள மும்பை மேயர் கிஷோர் பட்னேகர், "கொரோனா உயிரிழப்புகள் மறைக்கப்படுவதாகக் கூறப்படுவதில் எந்தவித உண்மையும் இல்லை. கொரோனா உயிரிழப்புகள் குறித்து 3 இடங்களில் பதிவு செய்யப்படுகிறது. எனவே கொரோனா உயிரிழப்புகளை மறைக்க முடியாது. உத்தரப்பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் கங்கை ஆற்றில் கொரோனா நோயால் இறந்தவர்களின் உடல்கள் வீசப்படுகிறது. ஆனால் அதுபோல கொரோனா நோயால் இறந்தவர்கள் உடலை வீச மும்பையில் ஆறு எதுவும் இல்லை. கொரோனா உயிரிழப்புகளை மறைக்கவில்லை. மறைக்கவும் முடியாது" என்று தெரிவித்தார். மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபேயும் கொரோனா உயிரிழப்புகளை அரசு மறைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், "அரசு மருத்துவமனையில் ஏற்படும் உயிரிழப்புகள் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படுகிறது. ஆனால் தனியார் மருத்துவமனையில் ஏற்படும் உயிரிழப்புகளை தனியார் மருத்துவமனைகள் உடனுக்குடன் பதிவேற்றம் செய்வதில்லை. அவ்வாறு உயிரிழப்புகளை பதிவுசெய்யாத மருத்துவமனைகள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மும்பையில் மட்டும் கொரோனாவிற்கு 15 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துவிட்டனர். ஆனால் மும்பை மாநகராட்சி நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டு கொரோனாவை கட்டுப்படுத்திவிட்டது. இதையடுத்து கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துவது குறித்து மாநில அரசு பரிசீலித்து வருகிறது. கொரோனா பரவலின் அடிப்படையில் வாரம் ஒரு முறை கட்டுப்பாடுகளை மாநில அரசு தளர்த்தி வருகிறது. மேலும் மும்பையில் மாநகராட்சி நிர்வாகம் 12 இடங்களில் 16 இடங்களில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை அமைக்க முடிவுசெய்துள்ளது. இதற்கு மாநகராட்சி சார்பில் டெண்டர் விடப்பட்டது. இதில் 3 நிறுவனங்கள் பங்கேற்று இருந்தது. ஆனால் அதில் இரண்டு நிறுவனங்களின் டெண்டர் தள்ளுபடி செய்யப்பட்டதால் இவ்விவகாரத்தில் மாநகராட்சி நிர்வாகம் எந்தவித முடிவும் எடுக்காமல் இருக்கிறது.
http://dlvr.it/S1RZXB
Thursday, 10 June 2021
Home »
» கொரோனாவால் இறந்தவர்களின் உடலை வீச மும்பையில் ஆறு எதுவுமில்லை! பாஜகவுக்கு மும்பை மேயர் பதிலடி!