மும்பை மாநகராட்சி நிர்வாகம் கொரோனா தடுப்பூசியை வெளியில் இருந்து வாங்குவதற்கு டெண்டர் வெளியிட்டுள்ளது. இது குறித்து மும்பை மேயர் கிஷோரி பட்னேகரிடம் ட்விட்டர் பக்கத்தில் ஒருவர் `யாருக்கு கொரோனா தடுப்பூசி சப்ளை செய்யும் ஒப்பந்தம் வழங்கப்பட்டிருக்கிறது' என்று கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு மேயர் கிஷோரி கோபமாக `உன் தந்தைக்கு' என்று கோபமாக பதிலளித்துவிட்டார். மேயரின் இந்த ட்வீட் சிறிது நேரத்தில் வைரலானது. கிஷோரி
உடனே சுதாரித்துக்கொண்ட கிஷோரி தனது ட்விட்டர் பதிவை அதிலிருந்து நீக்கிவிட்டார். ஆனால் அவரது பதிவிற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இது குறித்து, சமாஜ்வாடி கட்சி கவுன்சிலர் ரியாஷ் ஷேக் கூறுகையில், ``மேயர் அதற்குறிய கண்ணியத்தை காக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேயரின் இக்கருத்து அவரது பதவிக்கான கண்ணியத்தை குறைப்பதாக இருக்கிறது. இதனை மேயரின் மீடியா மேலாளர்கள் பதிவிட்டார்களா அல்லது மேயரே பதிவிட்டாரா என்பதை தெளிவுபடுத்தவேண்டும்" என்றும் அவர் குறிப்பிட்டார். இது குறித்து கிஷோரியிடம் கேட்டதற்கு, ``கூட்டம் ஒன்றில் கலந்து கொள்ள செல்லும் போது போனை கட்சி நிர்வாகி ஒருவரிடம் கொடுத்துவிட்டு சென்றேன். வந்து பார்த்தவுடன் அந்த ட்வீட்டை அகற்றிவிட்டேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
Also Read: மும்பை: ஃபேஸ்புக் மூலம் அறிமுகம்.. பெண்ணிடம் ரூ.1.7 கோடியை பறிகொடுத்த 82 வயது முதியவர்!
சிவசேனா சார்பாக மூன்றாவது முறையாக கவுன்சிலராக இருக்கும் கிஷோரி, மும்பை மாநகராட்சியின் 77வது மேயர் ஆவார். 2019-ம் ஆண்டு மேயராக பதவியேற்றார். மில் தொழிலாளியின் மகளான கிஷோரி தனது வாழ்க்கையை நர்ஸாக தொடங்கினார். முதல் முறையாக 2002ம் ஆண்டு மும்பை மாநகராட்சி கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், மும்பையில் கொரோனா தடுப்பூசி சப்ளை செய்ய டெண்டர் கொடுத்துள்ள 10 நிறுவனங்களில் ஒன்று கூட நம்பகத்தன்மை கொண்டதாக இல்லை என்று மும்பை மாநகராட்சியின் கூடுதல் கமிஷனர் வல்லரசு தெரிவித்துள்ளார். மாநகராட்சி கூட்டத்தில் இது தொடர்பாக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு அவர் தெரிவித்தார். ``டெண்டர் கொடுத்துள்ள நிறுவனங்களில் ஒன்று கூட தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனம் கிடையாது. அதோடு அந்நிறுவனங்கள் எதுவும் தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனத்தோடு ஒப்பந்தமும் செய்திருக்கவில்லை. அப்படி இருக்கும் போது எப்படி இந்நிறுவனங்கள் தடுப்பூசியை சப்ளை செய்யும்" என்று கேள்வி எழுப்பினார். டெண்டர் விவகாரத்தில் இரண்டு நாட்களில் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதனால் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
http://dlvr.it/S11Bqn
Friday, 4 June 2021
Home »
» மஹாராஷ்டிரா: ட்விட்டரில் கேள்வி கேட்டவருக்கு அநாகரிகமாக பதிலளித்த மும்பை மேயர் - கடும் சர்ச்சை!