பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் அடிக்கடி சர்ச்சைக்குறிய கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து சிக்கலில் மாட்டிக்கொள்வது வழக்கம். இதற்காகவே அவரின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. தற்போது இன்ஸ்டாகிராமில் தனது கருத்துக்களை தெரிவித்து வருகிறார். கொரோனா காரணமாக எந்த படத்திலும் நடிக்காமல் இருக்கும் கங்கனா, தான் நடித்த `தலைவி’ படத்தின் வெளியீட்டுக்காக காத்திருக்கிறார். போதிய படப்பிடிப்பு இல்லாத காரணத்தால் வருமான வரி செலுத்தவே கஷ்டப்படுவதாக கங்கனா ரணாவத் கவலை தெரிவித்தார். kangana
இது தொடர்பாக அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள செய்தியில், ``பாலிவுட்டில் நான் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக இருந்த போதிலும், போதிய வேலை இல்லாத காரணத்தால் வருமான வரியை சரியான நேரத்தில் செலுத்த முடியவில்லை. அரசுக்கு செலுத்தவேண்டிய 50 சதவீத வருமான வரியை இன்னும் செலுத்தவில்லை. நான் செலுத்த வேண்டிய வருமான வரிக்கு அரசு வட்டி போட்டுக்கொண்டிருக்கிறது” என்று கூறும், கங்கனா, `தனி நபர்களுக்கு இப்போது மிகவும் கஷ்டகாலமாக இருக்கலாம்’ என்று தெரிவித்தார். `அதிகப்படியான வருமான வரி செலுத்தும் நபராகவும், அதிக வருமான வரி செலுத்தும் நடிகையாகவும் இருக்கும் நான் எனது சம்பளத்தில் 45 சதவீதத்தை வருமான வரியாக செலுத்துகிறேன்.
ஆனால் போதிய வேலை இல்லாத காரணத்தால் கடந்த ஆண்டுக்கு செலுத்தவேண்டிய வருமான வரியில் 50 சதவீத்தை இன்னும் செலுத்தவில்லை. வாழ்க்கையில் முதல் முறையாக தாமதமாக வருமான வரி செலுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தலைவி படத்தை ஏப்ரல் 23-ம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால் கொரோனா காரணமாக அதனை வெளியிட முடியவில்லை. மேலும் கங்கனா, இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்தும் ஒரு படத்தில் நடிக்க திட்டமிட்டிருக்கிறார். பிரதமர் மோடிக்கு மிகவும் ஆதரவாக இருக்கும் நடிகை கங்கனா ரணாவத்தும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளார்.
http://dlvr.it/S1VpxC
Friday, 11 June 2021
Home »
» `வேலை இல்லாததால் வருமான வரியை செலுத்த முடியவில்லை!’ - சொல்கிறார் கங்கனா ரணாவத்