மும்பையின் தென் பகுதியில் அரசு விருந்தினர் இல்லமான சஹாரித்ரி கெஸ்ட் ஹவுஸ் இருக்கிறது. பொதுவாக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் இந்த இல்லத்தில் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டங்களை நடத்துவதுண்டு. வழக்கம் போல் முதல்வரின் மகனும் அமைச்சருமான ஆதித்ய தாக்கரே, சஹாத்ரி இல்லத்தில் உள்ள ஹால் ஒன்றில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திக்கொண்டிருந்தார். அவர்கள் ஆலோசனை நடத்திக்கொண்டிருந்த போது திடீரென ஹாலுக்கு வெளியில் மிகப்பெரிய சத்தம் கேட்டது. ஸ்லாப் இடிந்த இடம்
வெளியில் வந்து பார்த்த போது ஹாலுக்கு வெளியில் ஸ்லாப் இடிந்து விழுந்திருந்தது. அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இச்சம்பவம் சற்று நேரம் கழித்து வந்திருந்தால் ஆதித்ய தாக்கரே இதில் சிக்கியிருப்பார்.
இச்சம்பவத்தை தொடர்ந்து உடனே ஆதித்ய தாக்கரே நடத்திக்கொண்டிருந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டு அதிகாரிகள் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பப்பட்டனர். பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைந்து வந்து, மேற்கொண்டு இடியும் நிலையில் ஏதாவது பகுதி இருக்கிறதா என்று முழுமையாக ஆய்வு செய்தனர். கொரோனா பொதுமுடக்க கட்டுப்பாடுகள் காரணமாக பெரும்பாலான அமைச்சர்கள் அதிகாரிகளின் கூட்டத்தை சஹாத்ரி இல்லத்தில் தான் நடத்தி வருகின்றனர். அப்படி அடிக்கடி அதிகாரிகளின் கூட்டம் நடக்கும் இல்லத்தில் விபத்து நடந்திருப்பது அவர்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி இருக்கிறது. இடிந்து விழுந்த பகுதி 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது ஆகும். அ இச்சம்பவம் குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
http://dlvr.it/S166gs
Saturday, 5 June 2021
Home »
» மும்பை: அரசு விருந்தினர் இல்லத்தில் விபத்து.. உயிர் தப்பிய ஆதித்ய தாக்கரே!