கடந்த 10 நாட்களுக்கு முன் மும்பையில் போலி டாக்டர் பட்டம் பெற்றது தொடர்பாக பெண் தயாரிப்பாளரும், மனோதத்துவ நிபுணருமான ஸ்வப்னா பட்கர் கைது செய்யப்பட்டார். அவர் தற்போது தன்னை சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்தும், தனது முன்னாள் கணவரும் சேர்ந்து தன்னை துன்புறுத்துவதாகவும், பின் தொடர்வதாகவும் கூறி மும்பை உயர்நீதிமன்றத்தில் தனது வழக்கறிஞர் அபா சிங் மூலம் மனுத்தாக்கல் செய்தார். ஸ்வப்னா
இம்மனு விசாரணைக்கு வந்தபோது வழக்கறிஞர் அபா சிங் ஆஜராகி மனோதத்துவ நிபுணரான தனது கட்சிக்காரர் ஸ்வப்னா போலி பட்டம் பெற்றதாகக் கூறி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். எனது கட்சிக்காரர் மீது ஒட்டு மொத்த போலீஸ் படையும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. இதன் மூலம் பழிவாங்கும் நோக்கத்தில் போலீஸார் இக்காரியத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது. எனது கட்சிக்காரரை எம்.பி.சஞ்சய் ராவத்தின் தூண்டுதலால் துன்புறுத்துவதோடு அவரை ஒருவர் பின் தொடர்கின்றார். இது தொடர்பாக தனித்தனியாக மூன்று புகார் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.ஆனால் அம்மனுக்கள் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கு கருத்து தெரிவித்த நீதிபதிகள் சாம்பாஜி ஷிண்டே, ஜமாதார் உங்களது கட்சிக்காரர் கைது செய்யப்பட்டதை எதிர்த்து தனியாக மனுத்தாக்கல் செய்யும்படி கேட்டுக்கொண்டனர். மேலும் துன்புறுத்தல் மற்றும் பின் தொடர்தல் தொடர்பாக மும்பை போலீஸார் விசாரணை நடத்தி வரும் 24ம் தேதி அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்று மும்பை போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட்டனர். சஞ்சய் ராவத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாத் ஆஜராகி சம்பந்தப்பட்ட பெண் சஞசய் ராவத்தின் குடும்ப நண்பர் அவருக்கு மகளைப்போன்றவர் என்றும் குறிப்பிட்டார். ஸ்வப்னா சிவசேனா தலைவர் பால்தாக்கரே வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் மராத்தி படத்தை தயாரித்துள்ளார். அவர் போலி பி.எச்.டி. பட்டம் பெற்று அதனைக்கொண்டு மும்பையில் உள்ள மருத்துவமனையில் மனோதத்துவ நிபுணராக பணியாற்றி வந்த போது கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://dlvr.it/S2DQn6
Tuesday, 22 June 2021
Home »
» பெண் தயாரிப்பாளரைத் துன்புறுத்தினாரா சிவசேனா எம்.பி.சஞ்சய் ராவத்? போலீஸ் விசாரிக்க கோர்ட் உத்தரவு!