தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தில் பிறந்து, கர்நாடகாவில் ஆசிரமம் அமைத்து, அதன் பிறகு இந்தியாவின் பல்வேறு இடங்களிலும் கிளை ஆசிரமங்களைத் தொடங்கியவர் நித்யானந்தா. 2010-ம் ஆண்டு முதல் பல சர்ச்சைகளையும் வழக்குகளையும் சந்தித்துவந்தவர், கடந்த ஆண்டு புதிய நாடு ஒன்றை உருவாக்கியிருப்பதாகக் கூறிவந்தார். அந்த நாட்டுக்கு `கைலாசா' என்று பெயரிட்டிருப்பதாகவும் கூறியிருந்தார் நித்யானந்தா.
சத்சங்க உரை!
பல குற்ற வழக்குகள் காரணமாக போலீஸாரால் தேடப்பட்டுவரும் நித்யானந்தா, `நான் தனி நாடு உருவாக்கிவிட்டேன்' என்று சொன்னது காவல்துறையினருக்கு மட்டுமன்றி பொதுமக்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, ``நித்யானந்தா தனி நாடெல்லாம் உருவாக்கவில்லை. நேபாளத்துக்கு அருகே எங்கேயோ ஒளிந்துகொண்டிருக்கிறார்'' என்றும் சொல்லப்பட்டது. இந்தநிலையில் `சத்சங்கம்' என்கிற பெயரில் தினசரி வீடியோ வெளியிட்டு, சொற்பொழிவுகளை நிகழ்த்திவந்தார் நித்யானந்தா. அந்த வீடியோக்கள் எங்கு எடுக்கப்படுகின்றன என்பதைக் கண்டறிய முடியவில்லை.நித்யானந்தா
தனது சத்சங்க சொற்பொழிவுகள் மூலம் கைலாசா நாட்டின் கொடி, கரன்ஸி நோட்டுகள், ரிசர்வ் பேங் ஆஃப் கைலாசா, பாஸ்போர்ட் எனப் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுத் தொடர் அதிர்ச்சிகளைக் கொடுத்து வந்தார் நித்யானந்தா. தற்போது அவருடைய சீடர்கள் சிலர் நித்யானந்தா பற்றியும், கைலாசா பற்றியும் மேலும் சில அதிர்ச்சிகளைத் தந்திருக்கிறார்கள்.
பிரேக்கிங் நியூஸ்..!
`KAILASA's SPH JGM Nithyananda Paramashivam' என்பது நித்யானந்தா குழுவின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கம். இந்தப் பக்கத்தில் ஜூன் 1-ம் தேதி, அதிகாலை 3 மணியளவில், `பிரேக்கிங் நியூஸ்... நித்யானந்தா மற்றும் இந்து மதத்தின் மீது பயோ ஆயுதப் போர்' என்ற தலைப்பிட்டு, இந்திய நேரப்படி இன்று காலை 4:30 மணிக்கு இது குறித்த தகவல்கள் ஃபேஸ்புக் நேரலையில் வெளியாகும் எனப் பதிவிட்டிருந்தனர். மேலும் அந்தப் பதிவில், இதுகுறித்த விரிவான தகவல்கள் ஜூன் 1-ம் தேதி மாலை 4 மணிக்கு ஒளிபரப்பாகும் என்றும் கூறப்பட்டிருந்தது. கைலாசா, நித்யானந்தா
Also Read: `சொத்துகள் குறித்து நித்யானந்தா எழுதிய `உயில்' '!- காஞ்சிபுரம் மடாதிபதி சொல்வது என்ன?
பெண் சீடர்கள் சொல்வதென்ன?
அதன்படி ஜூன் 1-ம் தேதி மாலை வேளையில் நித்யானந்தாவின் சீடர்கள் ஃபேஸ்புக் நேரலை செய்தனர். இரண்டு பெண் சீடர்கள் அதிரடியாக சில தகவல்களை நேரலையில் பதிவு செய்திருந்தனர். அதில், ``இந்து மதத்தின் கடைசி நம்பிக்கையாக விளங்கும் கைலாசாமீது பயங்கரவாதிகள் பயோ ஆயுதப் போர் செய்ய முயற்சிக்கிறார்கள். சனாதன இந்து தர்மத்தின் வேர்களை அழிக்கவும் முயற்சிகள் நடந்து வருகின்றன. வெளிநாட்டிலிருந்து விஷக்கொல்லி விதைகள் கொண்ட பார்சல்கள், இந்திய அஞ்சல்துறை மூலமாகப் பெங்களூரு ஆசிரமத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன. ஆர்டர் செய்ததற்கான ஆதாரங்களைக் காட்டிவிட்டு, அந்தப் பார்சலை பெற்றுக்கொள்ளலாம் என்று இந்தியச் சுங்கத்துறை ஆதீனத்துக்குக் கடிதம் அனுப்பியிருக்கிறது. ஆனால், நாங்கள் அதனை ஆர்டர் செய்யவில்லை என்பதால், `நாங்கள் இந்த விதைகள் மட்டுமல்ல எந்தவொரு விதையையும் ஆர்டர் செய்யவில்லை' என்று ஆதீனத்திலிருந்து பதில் கடிதம் அனுப்பியிருக்கிறோம்.'' என்று சீடர்கள் கூறியிருக்கின்றனர். நித்யானந்தாவின் சீடர்கள்மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த உதவும் இந்த விஷக்கொல்லி விதைகள், தீவிரவாத குழுக்களால் அனுப்பப்பட்டிருக்கிறது. இந்த விதைகளால் இனப்படுகொலை நிகழலாம்!நித்யானந்தா பெண் சீடர்கள் நேரலைஇந்த விஷக்கொல்லி விதைகள் குறித்து நித்யானந்தா தனது சத்சங்க உரையில் கூறியிருப்பதாக, பெண் சீடர்களுள் ஒருவர் இந்தக் காணொலியில் கூறியிருக்கிறார். ஆனால் அப்படியான காணொலி எதுவும் நம் கண்ணில் படவில்லை.
மேலும், அந்த வீடியோவில் நித்யானந்தா சந்தித்த சிக்கல்களைப் பட்டியலிட்டுப் பேசிய சீடர்கள், ``போலீஸ் காவலில் இருந்தபோது அவரை கொலை செய்வதற்கு முயற்சிகள் நடந்தன. தமிழ்நாடு, கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் பலமுறை அச்சுறுத்தல்களையும், துன்புறுத்தல்களையும் எதிர்கொண்டார் அவர். அதிகாரத்திலிருப்பவர்கள் மூலம் பலவிதமான ஒடுக்குமுறைகளை எதிர்கொண்டார்'' என்று பேசியிருக்கிறார்கள். அதோடு நித்யானந்தாவை நேரில் சந்தித்து ஆசி பெற்ற பிரபலங்களை புகைப்படங்களோடு பட்டியலிட்டனர். நித்யானந்த சீடர்கள் ஃபேஸ்புக் நேரலை
Also Read: அடங்காத நித்தி! - கொரோனா லிங்கம்... ஹார்மோன் மாத்திரை... ‘கிறுகிறு’ ஹிப்னாட்டிசம்...
சில கேள்விகள்..?
பெங்களூரு ஆசிரம முகவரிக்கு அனுப்பப்பட்ட விதைகள் அடங்கிய பார்சலை, நித்யானந்தாவின் ஆதீனம் `நாங்கள் ஆர்டர் செய்யவில்லை' என்று வாங்க மறுத்துவிட்டதாகச் சீடர்கள் சொல்லியிருக்கின்றனர். ஆனால், பார்சலை பெறாமலேயே எப்படி அந்த விதைகள் விஷக்கொல்லி விதைகள்தான் என்று சீடர்கள் கூறுகிறார்கள் என்ற கேள்வி எழுகிறது. அதுமட்டுமல்லாமல், பெங்களூரு ஆசிரமத்துக்கு அனுப்பிய விதைகள் மூலம் கைலாசாவில் எப்படித் தாக்குதல் நடத்த முடியும் என்கிற கேள்வியும் எழுகிறது.இந்த கேள்விகளுக்கெல்லாம் மேலாக, ``கைலாசா என்கிற நாடு இருக்கிறதா... அப்படி இருந்தால் அது எங்கிருக்கிறது? இல்லை இதெல்லாமே நித்தியின் கட்டுக் கதைகளா?'' என்ற கேள்விகளும் நீண்ட நாள்களாக நம்மில் பலருக்கும் இருந்து வருகிறது!
http://dlvr.it/S13Hqp
Friday, 4 June 2021
Home »
» `கைலாசா மீது பயோ-வார்?; காவலிலிருந்தபோது கொலை முயற்சி' - நித்யானந்தா சீடர்கள் புகார்.. முழு விவரம்!