மும்பை முலுண்டில் வசிக்கும் ஸ்ருதி விஷால் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர். இதற்காக அவர் சிகிச்சை எடுத்து வருகிறார். மாத்திரைகளை சரியாக எடுத்துக்கொள்ளவில்லையெனில் அவரது நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டு விடும். திருமணாகி மூன்று குழந்தைகள் இருக்கும் ஸ்ருதி தனது குடும்பத்துடன் தனியாக வசித்து வந்தார். அருகில் அவரின் மாமியார் வேறு ஒரு வீட்டில் வசித்து வந்தார். ஸ்ருதியின் கணவர் இரண்டு குழந்தைகளை அழைத்துக்கொண்டு தனது பெற்றோரை பார்க்க சென்றார். ஸ்ருதி(இடதுபுறம்)
வீட்டில் ஒரு குழந்தையுடன் ஸ்ருதி இருந்தார். இரவில் ஸ்ருதி மாத்திரை எடுத்துக்கொள்ள மறந்துவிட்டார். இதனால் அவருக்கு அதிகாலை 2 மணிக்கு மனநிலை பாதிக்கப்பட்டு வீட்டை விட்டு வெளியில் வந்தார். அப்படியே ரயில் நிலையத்திற்கு வந்த ஸ்ருதி புறநகர் ரயிலில் ஏறி பத்லாப்பூரில் இருக்கும் தனது பெற்றோரை பார்க்க சென்றுவிட்டார். பத்லாப்பூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு அதிகாலை 6 மணிக்கு சென்றுவிட்டார். ஆனால் சிறிது நேரத்தில் வீட்டில் யாரிடமும் சொல்லாமல் கிளம்பி சென்றுவிட்டார். உடனே அவரது தாயார் பிரமிளா தனது மகளை காணாது அக்கம் பக்கம் தேடினார். எங்கும் கிடைக்கவில்லை. இதனால் ரயில் நிலையம் வரை கூட சென்று பார்த்து வந்தனர். ஆனால் கிடைக்கவில்லை.
ரயில் தண்டவாளத்தில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் ஸ்ருதி நின்று கொண்டிருந்தார். அவர் ரயில் தண்டவாளத்தின் மத்தியில் படுத்துவிட்டார். ரயில்வே ஊழியர்கள் அவரை பார்த்து அங்கிருந்து அகற்றும் முன்பாக அந்த வழியாக உதயன் எக்ஸ்பிரஸ் ரயில் வந்துவிட்டது. ரயில் மோட்டார்மெனும் அருகில் வந்த பிறகுதான் தண்டவாளத்தில் பெண் படுத்திருப்பதை பார்த்தார். உடனே அவர் அவசர பிரேக் போட்டார். ஆனால் ரயில் அவர் படுத்திருந்த இடத்தை கடந்து சென்றுவிட்டது. மோட்டார்மென் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். ரயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து அப்பெண்ணை மீட்டனர். அவர் அதிர்ச்சியில் இருந்தார். அவருக்கு லேசான காயம் இருந்தது. மற்ற படி எந்த வித பாதிப்பும் இல்லாமல் தப்பிவிட்டார். அவருக்கு குடிக்க தண்ணீர் கொடுத்து அச்சத்தில் இருந்து அவரை சகஜ நிலைக்கு கொண்டு வந்தனர். அதன் பிறகு அவர் யார் என்று கேட்டபோது தனது பெற்றோர் பத்லாப்பூரில் இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து ஸ்ருதியை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து ஸ்ருதியின் தாயார் பிரமிளா கூறுகையில், ஸ்ருதி வழக்கமாக எடுத்துக்கொள்ளும் மருந்தை எடுத்துக்கொள்ளவில்லையெனில் அவரது மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுவிடும். சம்பவம் நடந்த அன்றும் அவர் மருந்தை எடுத்துக்கொள்ள மறந்துவிட்டார் என்று தெரிவித்தார். அடுத்த இரண்டு நாள் கழித்தும் ஸ்ருதி உறக்கத்தில் வெளியில் எழுந்து சென்றுவிட்டார். அதன் பிறகு அவரை மீட்டுக்கொண்டு வந்தனர்.
http://dlvr.it/S25bdr
Sunday, 20 June 2021
Home »
» மும்பை: ரயில் தண்டவாளத்தில் இறங்கிப்படுத்த பெண்; உயிர் தப்பிய ஆச்சர்யம்!