பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியாகி இருக்கும் 'சார்பட்டா பரம்பரை' பலதரப்பட்டவர்களின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இந்தப் படத்தில் நடித்த ஒவ்வொரு கேரக்டரும் கவனம் ஈர்த்துள்ளது. 'காலா' படத்தை அடுத்து ஏறக்குறைய 3 வருடங்களுக்குப் பின் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கம் என்பதால் ரசிகர்களிடையே மிகவும் எதிர்பார்ப்புக்குள்ளான 'சார்பட்டா பரம்பரை' திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக படத்தில் 'டான்சிங் ரோஸ்' என்ற கதாபாத்திரம் நெட்டிசன்களால் பாராட்டபபட்டு வருகிறது. 1) இந்தப் படத்துக்காக பா.ரஞ்சித் செலுத்திய உழைப்பு வியப்புக்குரியது. 'சார்பட்டா'வின் கதையை 10 வருடத்ததுக்கு முன்பே எழுதிவிட்டார் பா.ரஞ்சித். அதுமட்டுமல்லாமல் படத்தை மெருகேற்ற பல்வேறு ஆய்வுகளையும் மேற்கொண்டிருக்கிறார். 2) மேம்போக்காக படம் இருந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தவர், இதற்காக தனியே 6 மாதங்களாக குத்துச்சண்டையைக் கற்றுக்கொண்டாராம். அதிலுள்ள நுணுக்கங்களை கறறுத் தேர்ந்த பின்னரே 'சார்பட்டா'வை உருவாக்கியிருக்கிறார். பா.ரஞ்சித் இயக்குநர் என்பதை தாண்டி நல்ல ஓவியரும் கூட. அதனால்தான் அவர் கதையை எழுதும்போதே சம்பந்தப்பட்ட கதாபாத்திரத்தை தன்னுடைய ஸ்கிரிப்டில் வரைந்து வைத்திருந்தாராம். 3) "படத்துக்காக மீனவர்கள் குடியிருப்பில் தங்கியிருந்து பயிற்சி பெற்றோம். கடுமையான உடற்பயிற்சியுடன் உணவுப் பழக்க வழங்கங்களையும் பின்பற்றினோம். படம் முழுவதும் யதார்ததமாக இருககவேண்டும் என்பதால் சின்னச் சினன விஷயங்களில் கூட கூடுதல் கவனம் செலுத்தினோம். இதற்காக நான் ஆறு மாதங்கள் குத்துச்சண்டை பயிற்சியைப் பெற்றேன்' என்று பேட்டி ஒன்றில் கூறியிருந்தார் பா.ரஞ்சித். 4) படத்தில் எந்தவித குறையும் இருந்துவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்துள்ள பா.ரஞ்சித், படக்குழுவினரையும் கடுமையாக பயிற்சிக்கு உட்படுத்தியிருக்கிறார். 'சார்பட்டா' நாயகன் ஆர்யா பல நாட்களாக இரவு, பகலாக ஜிம்மிலேயே தவம் கிடந்துள்ளார். மேலும் 4 மாதங்கள் பயிற்சிக்கு சென்று குத்துச்சண்டையை முறையாக கற்றுக்கொண்ட பின்னரே படத்தில் நடிததுள்ளார். கார்டியோ (உடல் எடை குறைப்பு முறை) மூலம் கடுமையான உணவுப் பழக்கங்களை பின்பற்றி உடல் எடையைக் குறைத்த அவர், நாள் ஒன்றுக்கு 6 முதல் 7 மணி நேரம் வரை கடுமையான பயிற்சியை மேற்கொள்வாராம். 5) கொரோனா பேரிடரால் படப்பிடிப்பு தற்காலிகமாக நின்றபோதும் தனனுடைய உடல் எடை கூடாமல் இருக்க அதே உணவுப் பழக்கத்தை தொடர்ந்து பின்பற்றி வந்திருக்கிறார் ஆர்யா. படத்துக்காக அவர் செலுத்திய உழைப்பு வீண்போகவில்லை என்பது படம் பார்த்தாலே தெரியும். 'சார்பட்டா பரம்பரை' படம் ஆர்யாவின் 30-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் ஆர்யாவுக்கு முன்னதாக நடிகர் கார்த்தி நடிக்கவிருந்தார். 'மெட்ராஸ்' பட ஆடியோ வெளியீட்டின்போதே மேடையில் அதனை சொல்லியிருப்பார் கார்த்தி. 6) இந்தப் படத்தில் நாயகனுக்கு இணையான புகழைப்பெற்றுள்ள 'டான்சிங் ரோஸ்' ஷபீர் தன்னுடைய உடல்வாகை செதுக்க 4 மாதங்களை எடுத்துக்கொண்டாராம். ஷபீருக்கு இது 3-வது படம் ஆகும். முனனதாக ரஜினியின் `பேட்ட' படத்திலும், ஜெயம் ரவியின் `அடங்க மறு' படத்திலும் நடித்திருந்தார். ஆனால், அதில் பெரிதும் கண்டுக்கொள்ளப்படாத அவர், தன்னுடைய 3வது படத்தின் மூலம் மிகப்பெரிய புகழைப் அடைந்துள்ளார். 7) 'ஏய் வேம்புலி... யூ ஆர் நாட் புலிமேன்...'' உள்ளிட்ட வசனங்கள் மூலம் படம் முழுக்க ஜாலியாக வலம்வரும் கெவின் கதாபாத்திரத்தில் நடித்த ஜான் விஜய் `ஓரம்போ' படத்துக்குப் பிறகு கிட்டத்தட்ட 15 வருடங்கள் கழித்து ஆர்யாவுடன் கைகோத்திருக்கிறார். தொடக்கத்தில் `மஞ்சா கண்ணன்' கேரக்டரில் நடிக்கவே ஜான் விஜய்யை அழைத்திருக்கிறார் இயக்குநர் பா.ரஞ்சித். ஆனால், சிறிது நாட்கள் கழித்து தனது எண்ணத்தை மாற்றியிருக்கிறார். அபபடி உருவானதுதான் கெவின் கதாபாத்திரம். அவருடைய அந்தத் தேர்வு கச்சிதமாக பொருந்தியிருப்பதை பார்கக முடிகிறது. 8) கெவின் கதாபாத்திரத்தை பொறுத்தவரை, அது ஓர் ஆங்கிலோ இந்தியன் கதாபாத்திரம். தனது கதாபாத்திரததின் நேர்த்திக்காக, வண்ணாரப்பேட்டையில் தங்கியிருந்து, அங்கிருக்கும் ஆங்கிலோ இந்தியன் மக்களின் மேனரிசம், ஸ்லாங், இங்கிலீஷ் எல்லாவற்றையும் உள்வாங்கியிருக்கிறார். அப்படியான அர்ப்பணிப்புதான் திரையில் பார்க்கும்போது, உண்மையிலேயே இவர் ஆங்கிலோ இந்தியனா என தோன்றும் அளவுக்கு கொண்டுவந்திருக்கிறது. முன்னதாக ஜான் விஜய்க்கு ஒதுக்கப்பட்ட மஞ்சா கண்ணன் கேரக்டரில் நடித்தவர் மாறன். ஆனால், கொரோனா அவரை உள்வாங்கி கொண்டதுதான் சோகம். 9) படத்தில் ஹீரோயின் கேரக்டரில் நடித்த துஷாரா விஜயன், திண்டுக்கல்லை பூர்விகமாக கொண்டவர். இவர் வடசென்னை மொழி சரளமாக பேச கஷ்டப்பட்டிருக்கிறார். பின்னர் அவருக்கு ஈசியாக பேச கற்றுக்கொடுத்தவர் இந்தப் படத்தின் எழுத்தாளர் தமிழ்ப் பிரபா. 10) படத்தில் பிரபல குத்துச்சண்டை வீரர் முகமது அலியை பிரதிபலிக்கும் வகையில் மேனரிஸத்தை ஆர்யாவை செய்ய வைத்திருக்கிறார் பா.ரஞ்சித். இந்தக் காட்சி போஸ்டர்களாகவும் வெளிவந்துள்ளது. - மலையரசு தொடர்புடைய இணைப்பு: பா.ரஞ்சித்தின் அடுத்த லெவல் பாய்ச்சல்: சார்பட்டா பரம்பரை - ஒரு விரைவுப் பார்வை
http://dlvr.it/S4HtZZ
Friday, 23 July 2021
Home »
» பாக்ஸிங் பயிற்சி முதல் முகமது அலி ரெஃபரென்ஸ் வரை: 'சார்பட்டா'வின் 10 பின்புலக் குறிப்புகள்