கோரதாண்டவமாடி இந்திய மக்களைப் பலி கொண்ட கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் சற்று குறைந்திருக்கும் இவ்வேளையில், ஒரே நாளில் 70-க்கும் அதிகமானோரின் உயிரைப் பறித்திருக்கிறது மின்னல்! உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (11.7.2021) அன்று சுமார் 70 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்திருக்கின்றனர். இந்த மூன்று மாநிலங்களிலும் தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது.குடியிருப்பு பகுதிகளில் ஒளி கீற்றுகளுடன் தோன்றிய மின்னல்
Also Read: புதுக்கோட்டை: கல்குவாரியில் மின்னல் தாக்கி விபத்து; மழைக்கு ஒதுங்கி நின்றவர்களுக்கு நேர்ந்த சோகம்!
உத்தரப் பிரதேசம்
உத்தரப் பிரதேசத்தின் 16 மாவட்டங்களில், இதுவரை 41 பேர் மின்னல் தாக்கியதால் உயிரிழந்திருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. இதில் 14 பேர் பிரக்யாராஜ் நகரைச் சேர்ந்தவர்கள். 30-க்கும் மேற்பட்டோருக்குக் காயம் ஏற்பட்டிருப்பதாகவும் உ.பி அரசு தெரிவித்திருக்கிறது.
மின்னல் தாக்கியதில் 250 விலங்குகள் உயிரிழந்திருப்பதாகவும், 20-க்கும் மேற்பட்ட விலங்குகள் காயமடைந்திருப்பதாகவும் உத்தரப் பிரதேச நிவாரண ஆணையம் தகவல் தெரிவித்திருக்கிறது.
ராஜஸ்தான்
ராஜஸ்தானில் மின்னல் தாக்கி 23 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 25 பேருக்கு அதிகமானோர் காயமடைந்திருப்பதாகவும் அந்த மாநிலத்தின் பேரிடர் மேலாண்மைத் துறை தகவல் வெளியிட்டிருக்கிறது. ராஜஸ்தானின் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான அமீர் கோட்டையில் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்த 11 பேரை மின்னல் பலி கொண்டதாகச் சொல்லப்படுகிறது.
இந்தச் சம்பவம் நடந்தபோது, அமீர் கோட்டையிலுள்ள வாட்ச் டவரின் மீது 27 சுற்றுலாப் பயணிகள் நின்று புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. அப்போது திடீரென மின்னல் தாக்கியதில் சிலர் உயிரிழந்திருக்கின்றனர். இன்னும் சிலர், மின்னல் தாக்கத்தால் ஏற்பட்ட பயத்தில் டவரின் மீதிருந்து குதித்திருக்கின்றனர். குதித்தவர்களில், சிலர் உயிரிழந்துவிட்டதாகவும், சிலர் காயங்களுடன் உயிர் தப்பியதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. ராஜஸ்தான், உ.பி மட்டுமல்லாது மத்தியப் பிரதேசத்திலும் மின்னல் தாக்கி 7 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.modi
Also Read: உ.பி -7, குஜராத் - 3, 11 பெண்கள், 8 பழங்குடியினர் - மோடி அமைச்சரவை 2.0 -வில் மொத்தம் எத்தனை பேர்?!
இழப்பீடு!
மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக 5 லட்சம் ரூபாயை அறிவித்திருக்கின்றன ராஜஸ்தான், உ.பி அரசுகள். மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களுக்கு வருத்தம் தெரிவித்ததோடு, பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து 2 லட்ச ரூபாய் இழப்பீட்டையும் அறிவித்திருக்கிறார் பிரதமர் மோடி. மேலும், காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயை இழப்பீட்டுத் தொகையாக அறிவித்திருக்கிறார் மோடி.இந்தியாவில், ஒவ்வொரு வருடமும் சராசரியாக 2,000 பேர் மின்னல் தாக்கி பலியாவதாகப் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. இந்த நிலையில், ஒரே நாளில் மூன்று மாநிலங்களைச் சேர்ந்த 70-க்கும் மேற்பட்டோர் மின்னல் தாக்கி உயிரிழந்திருக்கும் சம்பவம் இந்திய மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது!
http://dlvr.it/S3Ymv4
Monday, 12 July 2021
Home »
» ராஜஸ்தான், உ.பி.. செல்ஃபி எடுத்த 11 பேர்; மொத்தத்தில் 70 பேர்! - ஒரே நாளில் மின்னல் தாக்கி பலி