மதரீதியான சர்ச்சை பேச்சு விவகாரத்தில் கைதுசெய்யப்பட்ட பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. குமரி அருகே அருமனையில் 18-ஆம் தேதி நடந்த கிறிஸ்தவ அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில், பாரத மாதா மற்றும் இந்துமத கடவுள்களை விமர்சித்த குற்றச்சாட்டில் தேடப்பட்டுவந்த பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கைது செய்யப்பட்டார். பிரதமர், அமித் ஷா உள்ளிட்ட தலைவர்களையும் விமர்சித்த வீடியோ வைரலான நிலையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடப்பட்டு வந்தார். இந்நிலையில் மதுரை அருகே கள்ளிக்குடியில் காவல்துறை அவரை கைதுசெய்தது. அவரை அருமனையில் உள்ள குழித்துறை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்துமத நம்பிக்கைகளை இழிவாக பேசியதாக உள்ளிட்ட 7 பிரிவுகளில் தொடரப்பட்டிருந்த வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டிருக்கிறது.
http://dlvr.it/S4NDbp
Sunday, 25 July 2021
Home »
» பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுக்கு 15 நாள் நீதிமன்றக் காவல்