கேரளா திருவனந்தபுரம் அருகே கோட்டூர் காப்புக்காடு பகுதியில் யானைகள் வளர்ப்பு முகாம் உள்ளது. இதை கேரளா வனத்துறை பராமரித்து வருகிறது. அங்கு ஏராளமான யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கடந்த வாரம் அந்த முகாமில் இருந்த ஒன்றரை வயதே ஆன ஶ்ரீ குட்டி என்கிற பெண் யானை உயிரிழந்தது. ஹெர்ப்ஸ் என்ற வைரஸ் தாக்கி ஶ்ரீ குட்டி உயிரிழந்தது.கேரளா யானைகள் முகாம்
Also Read: ̀ராஜ தந்திரங்கள் அனைத்தும் வீணாகிவிட்டதே!' - வனத்துறையை பின்வாங்க வைத்த `பாகுபலி' யானை
இதையடுத்து, வனத்துறை மருத்துவக்குழு மற்ற யானைகளுக்கும் சோதனை செய்தனர். அதில் அர்ஜூன் என்றழைக்கப்படும் ஆறு வயது ஆண் யானைக்கும் ஹெர்ப்ஸ் தொற்று உறுதியானது.
அர்ஜூனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி அர்ஜூன் யானையும் உயிரிழந்துவிட்டது. கண்ணன் மற்றும் அமினா என்றழைக்கப்படும் இரண்டு குட்டி யானைகளும் ஹெர்ப்ஸ் வைரஸ் பாதிக்கப்பட்டு மோசமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றன.குட்டி யானை உயிரிழப்பு
இது கேரளாவில் பேரதிர்ச்சியையும், பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஶ்ரீ குட்டி தனது சுட்டித்தனத்தால் சுற்றுலாப் பயணிகளைக் கவரும். இரண்டு யானைகள் உயிரிழப்பு குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறப்பு மருத்துவக்குழு அமைத்து, வைரஸ் பாதித்த யானைகளிடமிருந்து மற்ற யானைகளுக்கு வைரஸ் பரவாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. யானைகளை மட்டுமே குறிவைத்து தாக்கும் இந்த வைரஸ் குறித்து மருத்துவக்குழுவினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.கடந்த ஆண்டு பிறந்தநாள் கொண்டாடிய ஶ்ரீ குட்டி
வைரஸ் பரவலால் கோட்டூர் முகாமில் உள்ள யானைகளை முதுமலை அல்லது வேறு பகுதிகளுக்கு மாற்றி பாதுகாக்க வேண்டும் என்று வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
http://dlvr.it/S38qKp
Tuesday, 6 July 2021
Home »
» யானைகளைத் தாக்கும் ஹெர்ப்ஸ் வைரஸ்; 2 யானைகள் பலி; 2 யானைகள் தீவிர சிகிச்சையில்; என்ன நடக்கிறது?