மும்பையில் குறிப்பிட்ட பகுதிகளில் புதிதாக குழந்தை பிறந்திருப்பது குறித்து திருநங்கைகளுக்கு தெரிய வந்தால், அந்த வீட்டிற்கு வந்து குழந்தையை ஆசிர்வாதம் செய்துவிட்டு பரிசுப் பணம், சேலை வாங்கி செல்வது வழக்கம். அது போன்று தென்மும்பை கஃப்பரேடு பகுதியில் உள்ள அம்பேத்கர் நகரில் வசிக்கும் சச்சின் என்பவருக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்திருந்தது. அக்குழந்தைக்கு ஆர்யா என்று பெயரிட்டு அழைத்து வந்தனர். சித்தரிப்பு படம்
இது குறித்து கேள்விப்பட்ட கன்னு சவுலே(28) என்ற திருநங்கை குழந்தை பிறந்த வீட்டிற்கு வந்தார். அவர் குழந்தையை ஆசிர்வாதம் செய்துவிட்டு பரிசுப்பணம் ரூ.1100, சேலை மற்றும் தேங்காய் கேட்டார். ஆனால் வீட்டில் இருந்தவர்கள் கொடுக்க மறுத்தனர். அதோடு கொரோனாவால் தங்கள் இருவருக்கும் வேலை பறிபோய்விட்டதாகவும், கொடுக்க பணம் இல்லை என்றும் தெரிவித்தனர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் திருநங்கை கோபத்தில் அங்கிருந்து சென்றுவிட்டார்.
கன்னு சோகமாக இருப்பது குறித்து அவரது தோழி விசாரித்த போது பரிசு பணம் கொடுக்க மறுத்தது குறித்து தெரிவித்துள்ளார். இதனால் அதிகாலை 2 மணிக்கு அதே பகுதிக்கு இருவரும் வந்தனர். சம்பந்தப்பட்ட குழந்தை இருக்கும் வீட்டின் கதவு திறந்திருந்தது. உடனே உள்ளே சென்று குழந்தையை அவர்கள் கடத்தி சென்றுவிட்டனர். அவர்கள் குழந்தையை அருகில் உள்ள கடற்கரை கழிமுகப்பகுதியில் உயிருடன் புதைத்துவிட்டனர். காலையில் எழுந்த பெற்றோருக்கு குழந்தையை காணாது அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் அருகில் உள்ள வீடுகளில் விசாரித்தனர். ஆனால் எந்த வித தகவலும் கிடைக்கவில்லை.
இதனால் குழந்தையை காணவில்லை என்று போலீஸில் புகார் செய்தனர். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். ஆனால் எங்கும் கிடைக்கவில்லை. வெள்ளிக்கிழமை அமாவாசை என்பதால் நரபலி கொடுக்க யாராவது கடத்தினார்களா என்ற கோணத்திலும் விசாரித்தனர். அதன் முந்தைய நாள் என்ன நடந்தது என்பது குறித்து குழந்தையின் பெற்றோரிடம் விசாரித்தனர். இதில் திருநங்கை வந்து பணம் கேட்டது குறித்தும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதும் குறித்தும் போலீஸாரிடம் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து கண்காணிப்பு கேமரா உதவியுடன் திருநங்ககையை பிடித்து விசாரித்த போது அவர் உண்மையை ஒப்புக்கொண்டார். அவர்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில் குழந்தையின் உடல் மீட்கப்பட்டது. இதையடுத்து குற்றவாளிகள் இரண்டு பேரையும் போலீஸார் கைது செய்தனர். கைதான திருநங்கை
அவர்கள் குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்ததனரா என்பது குறித்து பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வரும் என்று மும்பை போலீஸ் செய்தித்தொடர்பாளர் சைத்தன்யா தெரிவித்தார். குழந்தையின் பாட்டி இந்துபாய் இது குறித்து கூறுகையில், ``அவருக்கு ரூ.200 தருவதாக தெரிவித்தோம். ஆனால் 1100 ரூபாய் கேட்டார். அதனால் எங்களால் கொடுக்க முடியவில்லை. எங்களது ஒரே பேத்திக்கு முறைப்படி பெயர் கூட வைக்காமல் வெறுமனே ஆர்யா என்று மட்டும் அழைத்து வந்தோம்” என்று கண்ணீர் மல்க தெரிவித்தார். ஆசிர்வாதம் செய்ததற்கு பணம் கொடுக்காததற்கு குழந்தையையே கடத்தி கொலை செய்த சம்பவம் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
Also Read: ஒரு கொலை... இரண்டு தற்கொலை... விபரீதமாகிப்போன ஃபேஸ்புக் காதல் விளையாட்டு!
http://dlvr.it/S3SQ57
Saturday, 10 July 2021
Home »
» மும்பை: பரிசுப் பணம் தர மறுத்த பெற்றோர்! -3 மாத குழந்தையை உயிருடன் புதைத்த வழக்கில் திருநங்கை கைது