மும்பை அருகில் உள்ள பீவாண்டி என்ற இடத்தில் சாலையோரம் இரவு நேரங்களில் சிறுவன் ஒருவன் படுத்து உறங்குவதை போலீஸார் கவனித்தனர். பீட் மார்ஷல் போலீஸார் ஒரு முறை அச்சிறுவனை எழுப்பி விசாரித்த போது சரியாக பதில் சொல்லவில்லை. இதையடுத்து அவர்கள் உள்ளூர் போலீஸில் அவனை ஒப்படைத்தனர். அவனிடம் போலீஸார் விசாரித்த போது, தனது ஊர் நாக்பூர் என்று தெரிவித்தார். அதோடு, இந்தியிலும் பேசியிருக்கிறான். ஆனாலும் அவர் பெற்றோர் குறித்த விபரங்களைத் தெரிவிக்க மறுத்துள்ளான். பின் போலீஸார் அவனிடம் நடத்திய தொடர் விசாரணையில்தான், அவர் உண்மையில் பையனே இல்லை என்றும், 16 வயதுச் சிறுமி என்றும் தெரிய வந்தது. புனே ஹடப்சர் பகுதியைச் சேர்ந்த அச்சிறுமி தன் அம்மாவுடன் கோபித்துக்கொண்டு மும்பைக்கு வந்துள்ளார்.Mumbai (Representational Image)
கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு மும்பைக்கு ரயிலில் வந்த அச்சிறுமி தாதர் ரயில் நிலையத்தில் வந்து இறங்கி இருக்கிறார். பெண்ணாக இருந்தால் பாதுகாப்பு இருக்காது என்று கருதி, தனது முடியை பையன் போல வெட்டிக்கொண்டார். பின்னர் அங்கிருந்து அருகில் உள்ள பீவாண்டிக்குச் சென்றார். அங்கு ஆண்கள் அணியும் ஆடைகளை இரவல் வாங்கி அணிந்து கொண்டு பையனாகவே வாழ ஆரம்பித்தார். தோற்றத்துக்காக, தன்னை பையன் போல முழுமையாக மாற்றிக்கொண்டார். உடல் மொழியிலும் ஆண் போலவே தன்னை வெளிப்படுத்தினார். தன் பெயரையும் சமீர் ஷேக் என்று கூறிக்கொண்டார்.
சிறு சிறு வேலைகளை செய்ததோடு யாசித்தும் வாழ்ந்து வந்தார் அச்சிறுமி. அங்குள்ள கடைக்காரர்கள் அச்சிறுமிக்கு சாப்பாடு கொடுத்துள்ளனர். அங்குள்ள சாலையோரங்களில் இரவு நேரத்தில் படுத்து உறங்குவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.பெற்றோருடன் சேர்க்கப்பட்ட சிறுமி
Also Read: `கொரோனா தடுப்பூசிக்குப் பின் எனக்கு பார்வை திரும்பிவிட்டது!' - வியப்பூட்டும் மகாராஷ்டிர பெண்
போலீஸார் இந்த விவரங்களை அறிந்தவுடன் புனே போலீஸாரைத் தொடர்பு கொண்டு பேசினர். ஏற்கெனவே அச்சிறுமியைக் காணவில்லை என்று அவர் அம்மா புகார் கொடுத்திருந்தார். இதனால் புனே போலீஸார் அவர் அம்மாவை வரவழைத்து விசாரித்தனர். ஆரம்பத்தில் அச்சிறுமி தன் அம்மாவுடன் போனில் பேச மறுத்தார். போலீஸார், வாட்ஸ்அப் மூலம் வீடியோ கால் செய்து அச்சிறுமியை பேசச் செய்தனர். அவரை அவரின் அம்மா அடையாளம் கண்டுகொண்டார். இதையடுத்து அவர் அம்மா உடனே மும்பை வந்து தன் மகளை அழைத்துச் சென்றார். இனிமேல் இது போல நடந்து கொள்ளக்கூடாது என்று போலீஸார் அறிவுரை வழங்கி இருவரையும் அனுப்பி வைத்தனர். சிறுமியின் அப்பா இறந்துவிட்ட நிலையில், அவரின் அம்மா அரவணைப்பில்தான் முன்பு சிறுமி வாழ்ந்து வந்திருக்கிறார்.
http://dlvr.it/S3Dlx0
Wednesday, 7 July 2021
Home »
» வீட்டை விட்டு ஓடிவந்து, ஹேர்கட் செய்து, பையனைப் போல வாழ்ந்த சிறுமி; மீட்ட மும்பை போலீஸ்!