மும்பையில் 1999-01ம் ஆண்டு வரை மாநகராட்சி கமிஷனராக இருந்தவர் நளினக்ஷன்(79). இவர் தனது பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு சொந்த ஊரான கேரளாவிற்கு செல்லாமல் தொடர்ந்து மும்பை சர்ச்கேட் பகுதியில் வசித்து வந்தார். பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்டிருந்த நளினக்ஷன், தினமும் காலையில் எழுந்தவுடன் குளித்துவிட்டு சாமிக்கு பூஜை செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார். நளினக்ஷன்
புதன் கிழமை காலையிலும் அதே போன்று குளித்துவிட்டு பூஜையில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக பூஜை அறையில் இருந்த விளக்கில் இருந்த தீ, நளினக்ஷன் லுங்கியில் பற்றிக்கொண்டது. அவர் அவசரத்தில் தீயை அணைக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக பூஜை அறை கதவு உள்பக்கமாக பூட்டிக்கொண்டது. சம்பவம் நடந்த போது அனைவரும் வீட்டில் இருந்த போதும் அவர்களால் உடனே அவரை காப்பாற்ற முடியவில்லை. மாற்றுச்சாவி மூலம் கதவை திறந்த போது அவரது லுங்கி தீப்பற்றி எரிந்திருந்தது. லுங்கியை அவர் பெல்ட்டால் இருக்க கட்டி இருந்ததால் அதனை உடனே அவிழ்க்க முடியவில்லை. அவரை குடும்பத்தினர் அருகில் உள்ள பைகுலா மசினா மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் 90 சதவீதம் அளவுக்கு தீக்காயம் அடைந்திருந்தார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்தனர். ஆனால் துரதிஷ்டவசமாக சிகிச்சை பலனலிக்காமல் வெள்ளிக்கிழமை மாலையில் உயிரிழந்துவிட்டார்.
அவருக்கு மனைவி மற்றும் மூன்று மகன்கள் இருக்கின்றனர். ஒரு மகன் ஹாங்காங்கில் இருக்கிறார். இது குறித்து அவரது மகன் ஸ்ரீஜித் கூறுகையில், ``எனது தந்தை எப்போதும் பூஜையை மறந்ததில்லை. அவர் பூஜையில் இருந்த போது லுங்கியில் தீப்பிடித்துக்கொண்டது” என்று தெரிவித்தார்.
Also Read: "தேவ பிரசன்னம் முடிந்த பின் விசாரணை அறிக்கை..."- மண்டைக்காடு தீ விபத்து குறித்து அமைச்சர் சேகர்பாபு!
http://dlvr.it/S3Rfbc
Saturday, 10 July 2021
Home »
» மும்பை: பூஜையின்போது ஆடையில் தீப்பிடித்தது! - மாநகராட்சி முன்னாள் கமிஷனர் உடல் கருகி பலி