பிரதமர் மோடியின் விரிவுபடுத்தப்பட்ட மத்திய அமைச்சரவையில் பலருக்கும் புதிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பழைய அமைச்சர்களில் மூத்த அமைச்சர்கள் சிலர் தவிர்த்து, பிறரின் துறைகள் மாற்றப்பட்டுள்ளன. மெகா விரிவாக்கத்தின் மூலம் மத்திய அமைச்சரவையின் பலம் 53 என்ற எண்ணிக்கையில் இருந்து 77 ஆக அதிகரித்து உள்ளது. அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகளின் விவரம்: பிரதமர் நரேந்திர மோடி: பணியாளர், குறைதீர், ஓய்வூதியம்; அணுசக்தி, விண்வெளி, முக்கிய கொள்கை விவகாரங்கள், பிற அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படாத துறைகள் கேபினட் அமைச்சர்கள் 1. ராஜ்நாத் சிங் - பாதுகாப்புத் துறை 2. அமித் ஷா - உள்துறை, கூட்டுறவுத் துறை 3. நிதின் ஜெய்ராம் கட்கரி - சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை 4. நிர்மலா சீதாராமன் - நிதி, கார்பரேட் விவகாரங்கள் 5. நரேந்திர சிங் தோமர் - வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் 6. டாக்டர். சுப்ரமணியம் ஜெய்சங்கர் - வெளியுறவு விவகாரங்கள் 7. அர்ஜுன் முண்டா - பழங்குடியின விவகாரங்கள் 8. ஸ்மிரிதி இரானி - பெண்கள், குழந்தைகள் நலத்துறை 9. பியூஷ் கோயல் - வர்த்தகம், தொழிற்துறை; நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது விநியோகத்துறை; ஜவுளித்துறை 10. தர்மேந்திர பிரதான் - கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறை 11. பிரஹ்லாத் ஜோஷி - நாடாளுமன்ற விவகாரங்கள்; நிலக்கரி, கனிம வளம் 12. நாராயண் தாட்டு ராணே - குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை 13. சர்பானந்த சோனோவால் - துறைமுகங்கள், கப்பல், நீர்வழித்துறை, ஆயுஷ் 14. முக்தார் அப்பாஸ் நக்வி - சிறுபான்மையினர் விவகாரங்கள் 15. விரேந்திர குமார் - சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை 16. கிரிராஜ் சிங் - கிராமப்புற வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் 17. ஜோதிராதித்ய சிந்தியா - சிவில் விமான போக்குவரத்து 18. ராம்சந்திர பிரசாத் சிங் - எஃகு 19. அஷ்வினி வைஷ்ணவ் - ரயில்வே; தொலைத்தொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை 20. பஷுபதி குமார் பராஸ் - உணவு பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் 21. கஜேந்திர சிங் ஷெகாவத் - ஜல சக்தி 22. கிரெண் ரிஜிஜு - சட்டம் மற்றும் நீதி 23. ராஜ் குமார் சிங் - மின்சாரம் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கவல்ல எரிசக்தித்துறை 24. ஹர்தீப் சிங் பூரி - பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் 25. மன்சூக் மாண்டவியா - சுகாதாரம் மற்றும் குடும்ப நலம் மற்றும் ரசாயனம், உரத்துறை 26. பூபேந்தர் யாதவ் - சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றம் மற்றும் தொழிலாளர் நலத்துறை 27. மகேந்திர நாத் பாண்டே - கனரக தொழிற்சாலைகள் துறை 28. பர்ஷோத்தம் ரூபாலா - மீன் வளம், கால்நடை பராமரிப்பு, பால் பண்ணை 29. கிஷ்ண் ரெட்டி - கலாசாரம், சுற்றுலா மற்றும் வடகிழக்கு பிராந்திய மேம்பாடு 30. அனுராக் சிங் தாக்குர் - தகவல் ஒலிபரப்புத்துறை; இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை மத்திய இணை அமைச்சர்கள் (தனிப்பொறுப்பு) 31. ராவ் இந்தர்ஜித் சிங் - புள்ளியல் மற்றும் திட்ட அமலாக்கம் (தனிப்பொறுப்பு); திட்டத்துறை (தனிப்பொறுப்பு); கார்பரேட் விவகாரங்கள் 32. ஜிதேந்திர சிங் - அறிவியல் தொழில்நுட்பம் (தனிப்பொறுப்பு); புவி அறிவியல் (தனிப்பொறுப்பு); பிரதமர் அலுவலகம்; பணியாளர், மக்கள் குறை தீர், ஓய்வூதியம்; அணுசக்தி, விண்வெளி மத்திய இணை அமைச்சர்கள் 33. ஸ்ரீபாத் யெஸ்ஸோ நாயக் - துறைமுகங்கள், கப்பல், நீர்வழி; சுற்றுலா 34. ஃபகன்சிங் குலஸ்தே - எஃகு; கிராமப்புற வளர்ச்சி 35. பிரஹ்லாத் சிங் படேல் - ஜல சக்தி; உணவு பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் 36. அஷ்வினி குமார் செளபே - நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம்; சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றம் 37. அர்ஜுன் ராம் மேக்வால் - நாடாளுமன்ற விவகாரங்கள்; கலாசாரத்துறை 38. ஜெனரல் (ஓய்வு) வி.கே. சிங் - சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் சிவில் விமான போக்குவரத்து 39. கிரிஷண் பால் - மின்சாரம் மற்றும் கனரக தொழிற்சாலைகள் 40. தன்வே ராவ்சாஹேப் தாதாராவ் - ரயில்வே; நிலக்கரி, கனிம வளங்கள் துறை 41. ராம்தாஸ் அத்வாலே - சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை 41. சாத்வி நிரஞ்சன் ஜோதி - நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம்; கிராமப்புற வளர்ச்சித்துறை 43. சஞ்சீவ் குமார் பல்யான் - மீன் வளம், கால்நடை பராமரிப்புத்துறை 44. நித்யானந்த் ராய் - உள்துறை விவகாரங்கள் 45. பங்கஜ் செளத்ரி - நிதித்துறை 46. அனுப்ரியா சிங் படேல் - வர்த்தகம் மற்றும் தொழிற்சாலைகள் துறை 47. பேராசிரியர் எஸ்.பி. சிங் பாகேல் - சட்டம் மற்றும் நீதித்துறை 48. ராஜீவ் சந்திரசேகர் - திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர்; மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை 49. ஷோபா கரண்ட்லஜே - வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் 50. பானு பிரதாப் சிங் வெர்மா - குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் துறை 51. தர்ஷணா விக்ரம் ஜார்தோஷ் - ஜவுளித்துறை, ரயில்வே துறை 52. வி. முரளிதரன் - வெளியுறவு விவகாரங்கள்: நாடாளுமன்ற விவகாரங்கள் 53. மீனாக்ஷி லேகி - வெளியுறவு விவகாரங்கள், கலாசாரத்துறை 54. சோம் பர்காஷ் - வர்த்தகம் மற்றும் தொழிற்துறை 55. ரேணுகா சிங் சாருதா - பழங்குடியின விவகாரங்கள் 56. ராமேர்வர் டேலி - பெட்ரோலியம், இயற்கை எரிவாயு; தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை 57. கைலாஷ் செளத்ரி - வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் 58. அன்னபூர்ண தேவி - கல்வித்துறை 59. ஏ. நாராயணசுவாமி - சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை 60. கெளஷல் கிஷோர் - வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் 61. அஜய் பட் - பாதுகாப்பு; சுற்றுலா துறை 62. பி.எல். வெர்மா - வடகிழக்கு பிராந்திய மேம்பாடு; கூட்டுறவுத்துறை 63. அஜய் குமார் - உள்துறை விவகாரங்கள் 64. தேவ்சின்ஹ் செளஹான் - தொலைத்தொடர்புத்துறை 65. பக்வந்த் குபா - புதிய மற்றும் புதிப்பிக்கவல்ல எரிசக்தி; ரசாயனம் மற்றும் உரத்துறை 66. கபில் மோரேஸ்வர் பாட்டீல் - பஞ்சாயத்து ராஜ் 67. பிரதிமா பூமிக் - சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை 68. சுபாஸ் சர்கார் - கல்வித்துறை 69. பக்வத் கிஷண் ராவ் கரத் - நிதித்துறை 70. ராஜ்குமார் ரஞ்சன் சிங் - வெளியுறவு விவகாரங்கள்; கல்வித்துறை 71. பாரதி பிரவீண் பவார் - சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் 72. பிஷேஸ்வர் துடு - பழங்குடியின விவகாரங்கள்; ஜல சக்தி 73. ஷாந்தனு தாக்குர் - துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர்வழித்துறை 74. முஞ்சபாரா மஹேந்திரபாய் - பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை; ஆயுஷ் 75. ஜான் பார்லா - சிறுபான்மையினர் விவகாரங்கள் 76. எல். முருகன் - மீன் வளம், கால்நடை பராமரிப்பு,பால் பண்ணை; தகவல் ஒலிபரப்புத்துறை 77. நிஷிஷ் ப்ராமனிக் - உள்துறை விவகாரங்கள்; இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை
http://dlvr.it/S3J84W
Thursday, 8 July 2021
Home »
» மத்திய அமைச்சரவை மெகா விரிவாக்கம்: யாருக்கு என்ன துறை? - முழு விவரம்