மும்பையில் போதைப்பொருள்களின் புழக்கம் அதிக அளவில் இருக்கிறது. மும்பையில் சப்ளை செய்வதற்காகவே சர்வதேச நாடுகளில் இருந்து போதைப்பொருள்கள் கடத்தி வரப்படுகிறது. போதைப்பொருள்களைப் பல்வேறு விதமாகக் கலந்து பொதுமக்களுக்கு சப்ளை செய்கின்றனர். தென்னாப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த வாலிபர்கள் அந்த வகையில் அதிக அளவில் போதைப்பொருட்களை கடத்திவரும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். தென்மும்பையைச் சேர்ந்த மனோதத்துவ டாக்டர் ஒருவர் கஞ்சா, அபின் கலந்து கேக் தயாரித்து விற்பனை செய்வதாகப் போலீஸருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. பறிமுதல் செய்யப்பட்ட கேக்
உடனே போலீஸார் தென் மும்பையில் வசிக்கும் டாக்டர் ரஹ்மீன் சரண்யா என்பவர் வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கஞ்சா கலந்து தயாரிக்கப்பட்ட 10 கிலோ கேக் பறிமுதல் செய்யப்பட்டது. 'ஹஸ் புரொவ்னி' என்ற பெயரில் இது போன்ற போதைப்பொருள்கள் கலந்த கேக்களை ஆடம்பர பார்ட்டிகளுக்கு சப்ளை செய்துள்ளனர். மனோதத்துவ டாக்டரின் வீட்டில் சோதனை நடத்தியதில் 320 கிராம் அபின் மற்றும் 1.72 லட்சம் ரொக்க பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவத்தையடுத்து ரஹ்மீன் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தி கிராப்போர்டு மார்க்கெட்டை சேர்ந்த ரம்ஜான் ஷேக் என்பவரைக் கைது செய்தனர். அவரிடமும் விசாரணை நடத்தியதில் ஷேக்தான் டாக்டருக்கு தேவையான போதைப்பொருட்களை சப்ளை செய்தது தெரிய வந்தது. கடந்த மாதம் 12-ம் தேதியும் இதே போன்று போதைப்பொருள் கலந்த கேக்களை தயாரித்துவிற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
http://dlvr.it/S3hc9h
Wednesday, 14 July 2021
Home »
» `மும்பை பார்ட்டிகளில் 'போதை கேக்' சப்ளை'- மனோதத்துவ டாக்டர் கைது!