மும்பை அருகில் உள்ள கல்யாண் ரயில் நிலையத்தில் ஹரிபிரசாத் என்ற 70 வயது முதியவர் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அவர் ரயிலை கடக்க முயன்ற நேரம் மும்பை-வாரணாசி ரயில் பிளாட்பாரத்தில் இருந்து புறப்பட்டு இருந்தது. இதனை ஹரி பிரசாத் கவனிக்கவில்லை. ஆனால் இதனை கவனித்த ரயில்வே பராமரிப்பு ஊழியர்கள் ரயில்வே மோட்டார்மேனை நோக்கி சத்தம் போட்டு கத்தினர். இதனை கவனித்த மோட்டார்மேன் பிரதான், முதியவர் ஒருவர் ரயில் முன்பு வந்ததை கவனித்து உடனே திடீரென பிரேக் போட்டார். ரயில்வே ஊழியர்கள் முதியவரிடம் கீழே படுக்கும்படி கத்தினர். ரயிலுக்கு அடியில் இருந்து முதியவர் மீட்பு
முதியவரும் அதிர்ச்சியில் என்ன செய்வது என்று தெரியாமல் தண்டவாளத்தில் அப்படியே படுத்துவிட்டார். ரயில் இன்ஜின் முதியவர் படுத்திருந்த பகுதியை கடந்தே நின்றது. எனினும் அதிர்ஷ்டவசமாக அவருக்கு லேசான காயமே ஏற்பட்டது. ரயில்வே ஊழியர்கள் ரயில் தண்டவாளத்தில் இருந்து முதியவரை பத்திரமாக மீட்டனர். நூலிழையில் முதியவர் உயிர் பிழைத்தார். சில நொடிகள் மோட்டார்மென் தாமதித்து இருந்தாலும் முதியவரை உயிரோடு பார்த்திருக்க முடியாது. ரயில்வே ஊழியர்கள் முதியவரிடம் ரயில் தண்டவாளத்தை கடக்கக்கூடாது என்று கவுன்சிலிங் கொடுத்து அனுப்பி வைத்தனர்.
துரிதமாக செயல்பட்டு பிரேக் பிடித்து முதியவரை காப்பாற்றிய மோட்டார்மேன் பிரதான், ரவி ஆகியோருக்கு மத்திய ரயில்வே சன்மானம் அறிவித்துள்ளது. பயணிகள் ரயில் தண்டவாளத்தை கடப்பதை தவிர்க்கவேண்டும் என்று மத்திய ரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது. மும்பையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இம்மழையால் நகரில் புறநகர் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் பல மணி நேரம் காத்திருக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ரயில் போக்குவரத்து நிறுத்தம்
எனவே அதிகமானோர் ரயிலில் இருந்து இறங்கி நடந்து தண்டவாளத்தில் நடந்து சென்றனர். மும்பையில் ஒவ்வொரு ஆண்டும் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் மும்பை புறநகர் ரயில்களில் அடிபட்டு உயிரிழந்து வருகின்றனர். அதில் அதிகமானோர் ரயில் தண்டவாளத்தை கடப்பது மற்றும் ரயிலில் இருந்து தவறி விழுவது போன்றவற்றால் உயிரிழந்து வருகின்றனர். அப்படி உயிரிழப்பவர்களில் பாதிப்பேர் அடையாளம் காணப்படாமலேயே ரயில்வே போலீஸாரால் தகனம் செய்யப்படுகின்றனர்.
http://dlvr.it/S40lNQ
Monday, 19 July 2021
Home »
» மும்பை: தண்டவாளத்தை கடக்க முயன்ற முதியவர்; திடீரென புறப்பட்ட ரயில்! -மீட்ட ரயில்வே ஊழியர்கள்