வாள்வீச்சுப் போட்டியின் இரண்டாவது சுற்றில் வெற்றிப்பெற முடியவில்லை அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று இந்திய வீராங்கனை பவானி தேவி ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் வாள் சண்டையில் இந்திய வீராங்கனை பவானி தேவி 2ஆவது சுற்றில் தோல்வியடைந்தார். 2-ஆவது சுற்று போட்டியில் உலக தரவரிசையில் 3-ஆவது இடத்தில் உள்ள பிரான்ஸ் வீராங்கனை மனோன் புரூனட்டை பவானிதேவி எதிர்கொண்டார். இதில் மனோன் புரூனட் எளிதில் வெற்றிபெற்றார். முன்னதாக இன்று அதிகாலை நடைபெற்ற முதல் சுற்றுப் போட்டியில் துனிஷிய வீராங்கனை பென் அசிசியை பவானி தேவி எளிதில் வீழ்த்தியிருந்தார். சென்னையைச் சேர்ந்த பவானிதேவி ஒலிம்பிக் வாள் சண்டையில் களமிறங்கிய முதல் இந்தியர் என்ற பெருமையையும் ஏற்கெனவே பெற்றிருந்தார். இந்நிலையில் தன்னுடைய தோல்வி குறித்து ட்விட்டர் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டிருந்தார் பவானி தேவி. அதில் "இது மிகப் பெரிய நாள் உற்சாகமாகவும் உணர்வுபூர்வமாகவும் உணர்கிறேன். ஒலிம்பிக் வாள்வீச்சு முதல் போட்டியில் நாடியா அசிசீயை 15/3 என்ற கணக்கில் வென்றேன். இதன் மூலம் ஒலிம்பிக் வாள்வீச்சு போட்டியில் வென்ற முதல் இந்தியா வீராங்கனையானேன்." மேலும் "எனது இரண்டாவது போட்டியில், வாள்வீச்சு போட்டியில் உலக தரவரிசையில் மூன்றாவது இடத்தில் இருக்கும் மனோன் புரூனெட்டிடம் 7/15 என்ற கணக்கில் தோல்வி அடைந்தேன். நான் எனது சிறந்த ஆட்டத்தை அளித்தேன். ஆனால் வெற்றி பெற முடியவில்லை. மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.எல்லா முடிவுகளுக்கு ஒரு ஆரம்பம் இருக்கிறது. நான் தொடர்ந்து பயிற்சி எடுத்து பிரான்ஸில் நடக்கும் அடுத்த ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று எனது நாட்டை பெருமையடைய செய்வேன். அடுத்த ஒலிம்பிக்கில் கூடுதல் வலியுடன் வருவேன். எனது பயிற்சியாளர்கள், பெற்றோர்கள், இந்திய மற்றும் தமிழக மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்" என பதிவிட்டிருக்கிறார் பவானி தேவி.
http://dlvr.it/S4Srxr
Tuesday, 27 July 2021
Home »
» "வெற்றிப்பெற முடியவில்லை, மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" - பவானி தேவி உருக்கம்