கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 12 வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே மாதிரியான தளர்வுகளை அமல் செய்துள்ளது தமிழ்நாடு அரசு. எவற்றுக்கெல்லாம் அனுமதி மற்றும் கூடுதல் தளர்வுகள்! >தமிழகம் முழுவதும் கடைகள் இரவு 8 மணி வரை திறந்திருக்க அனுமதி. >ஹோட்டல்கள் 50% வாடிக்கையாளர்களுடன் காலை 6 முதல் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதி. >ஹோட்டல்களில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு உண்ண அனுமதி. >தேநீர் கடைகளிலும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து தேநீர் அருந்த அனுமதி. >இரவு 7 மணி வரை செயல்பட்டு வரும் கடைகள் அனைத்துக்கும் நேரம் இரவு 8 மணி வரை நீட்டிப்பு. >திருமண நிகழ்வுக்கு 50 பேரும், இறுதிச் சடங்கு நிகழ்வுக்கு 20 பேரும் மட்டுமே பங்கேற்க அனுமதி. >அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத்துக்கு உள்ளேயும் வெளியேயும் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி. >உடற்பயிற்சி கூடங்கள் 50 சதவிகித வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதி. >வழிபாட்டுத் தலங்கள் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதி. எவற்றுக்கெல்லாம் தடை தொடரும்? >பள்ளி, கல்லூரிகள், உயிரியல் பூங்காக்கள், பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாசார நிகழ்வுகளுக்கு தடை. >திரையரங்குகள், மதுக்கூடங்கள், நீச்சல் குளங்கள், அரசியல் கூட்டங்களுக்கு தடை நீடிக்கிறது. >மாநிலங்கள் இடையே தனியார், அரசுப் போக்குவரத்துக்கு தடை நீடிக்கிறது. >உள்துறையால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்கள் தவிர, சர்வதேச விமானப் போக்குவரத்துக்கு தடை. இ-பாஸ், இ-பதிவு முறை ரத்து >மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க இ-பாஸ் மற்றும் இ-பதிவு முறை ரத்து செய்யப்படுகிறது.
http://dlvr.it/S2ykJy
Saturday, 3 July 2021
Home »
» இ-பாஸ் முறை ரத்து: தமிழ்நாட்டில் எதற்கெல்லாம் கூடுதல் தளர்வுகள்? எதற்கெல்லாம் தடை தொடரும்?