சமீபத்தில் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில், முஸ்லிம் ஆண் - இந்துப் பெண் இருவருக்கும் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் நடக்கவிருந்தது. ஆனால், அதற்குப் பெண்ணின் வீட்டாருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் மிரட்டல்கள் வந்தன. இதனால் அத்திருமணத்தையே பெண் வீட்டார் நிறுத்திவிட்டனர். தற்போது அது போன்ற மற்றொரு சம்பவம், மும்பையிலும் நடந்துள்ளது. மும்பை கார் ரோடு பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், வேறு ஒரு மதத்தைச் சேர்ந்த ஆணுக்கும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் முடிவாகி இருந்தது. திருமணம்
Also Read: சமூக வலைதள நெருக்கடி; முஸ்லிம் வாலிபருடன் நடக்கவிருந்த மகளின் திருமணத்தை நிறுத்திய மும்பை பெற்றோர்!
அவர்களது திருமணத்துக்கு பெண் வீட்டில் அனைவரும் ஒப்புதல் கொடுத்துவிட்டனர். ஆனால், இது குறித்து தெரிந்துகொண்ட இரண்டு பேர், அப்பெண்ணின் வீட்டுக்குச் சென்று, வேறு மதத்தைச் சேர்ந்தவருடன் திருமணம் செய்ய வேண்டாம் என்று கூறி, சம்பந்தப்பட்ட பெண்ணை மூளைச்சலவை செய்ய ஆரம்பித்தனர். ஆனால், அப்பெண் தனது முடிவில் உறுதியாக இருந்தார். இதனால் இரண்டு பேரும் அப்பெண்ணின் பெற்றோரிடம் இது குறித்துப் பேசினர்.
பெண்ணின் தந்தையிடம் பேசி அவரை திருமணத்துக்கு எதிராக திசை திருப்பினர். அவர்களுடன் ஒரு பெண்ணும் வந்ததாகத் தெரிகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட மணப்பெண் போலீஸில் புகார் செய்தார். போலீஸார் அப்பெண்ணின் வீட்டுக்குச் சென்று, இரண்டு பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து விசாரித்தனர்.
இருவரும், தாங்கள் எந்த வித நிர்ப்பந்தமும் செய்யவில்லை என்றும், சம்பந்தப்பட்ட பெண்ணின் தந்தை உடல் நலம் குறித்து விசாரிக்கவே சென்றதாகவும் தெரிவித்தனர்.Marriage - Representational Image
Also Read: நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை காதல் திருமணம் வெல்லுமிடம் இதுதான்! #AllAboutLove - 22
தேவையில்லாமல் அப்பெண்ணின் திருமணத்தில் தலையிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இருவரையும் எச்சரித்து அனுப்பி வைத்த போலீஸார், அப்பெண்ணிடமும் வாக்குமூலம் வாங்கினர்.
தான் மேஜர் என்பதால் தனது தனிப்பட்ட விருப்பத்தில் யாரும் தலையிட முடியாது என்று அப்பெண் தெரிவித்துள்ளார். ``அப்பெண்ணின் தந்தை, மன அழுத்தத்தில் இருக்கிறார். சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு தேவைப்பட்டால் சட்ட ஆலோசனை வழங்கப்படும்'' என்று சமூக ஆர்வலர் தீஷ்தா தெரிவித்துள்ளார்.
http://dlvr.it/S3mLdX
Thursday, 15 July 2021
Home »
» இந்துப் பெண் மத மறுப்பு திருமணம் செய்வதைத் தடுக்க முயற்சி; எச்சரித்த மும்பை போலீஸ்!