மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் மகாராஷ்டிராவை சேர்ந்த நான்கு பேருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அவர்களில் நாராயண் ரானே உட்பட 3 பேர் வேறு கட்சியில் இருந்து பாஜகவுக்கு வந்தவர்கள் ஆவர். இதனை குறிப்பிட்டு பாஜகவை சிவசேனா கிண்டல் செய்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத், ``மத்திய அமைச்சரவையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள கபில் பாட்டீல், பாரதி பவார் ஆகியோர் இதற்கு முன்பு தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்தவர்கள். நாராயண் ரானே சிவசேனா மற்றும் காங்கிரஸ் கட்சிகளில் இருந்தவர். எனவே மத்திய அமைச்சரவைக்கு மனித வளத்தை கொடுத்த சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு பாஜக நன்றி சொல்லவேண்டும். பிரதமர் நரேந்திரமோடி அவர்களுக்கு முக்கியமான இலாகாக்களை கொடுக்கும் முன்பாக எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். நாராயண் ரானேயின் அந்தஸ்துக்கு அவருக்கு ஒதுக்கப்பட்ட துறை சிறியதாகும். sanjay raut
ரானே இதற்கு முன்பு முதல்வராக இருந்திருக்கிறார். அதோடு முக்கிய இலாகாக்களையும் வகித்திருக்கிறார். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சிறுகுறு தொழில்களை மீட்டெடுத்து, வேலை வாய்ப்புக்களை உருவாக்குவது ரானேயிக்கு மிகவும் சவாலான காரியமாக இருக்கலாம்” என்றார்.
சிவசேனாவை எதிர்கொள்ளவே நாராயன் ரானேவுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளதா என்று கேட்டதற்கு, ``அப்படி செய்திருந்தால் அமைச்சரவையையும், அரசியல்சாசனத்தையும் அவமதித்ததாகும். அமைச்சர்களை மக்கள் பணியாற்ற நியமிக்கிறீர்களா அல்லது எதிர்கட்சிகளை குறிவைத்து நியமிக்கிறீர்களா” என்று கேள்வி எழுப்பிய சஞ்சய் ராவத், ``நான்கு முக்கியமான துறைகள் கிடைத்திருக்கிறது. இதன் மூலம் மக்களுக்கு சேவை செய்ய நல்ல சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது” என்று தெரிவித்தார்.
அதேசமயம் பிரகாஷ் ஜவடேகரை மத்திய அமைச்சரவையில் இருந்து நீக்கியதை சஞ்சய் ராவத் விமர்சித்தார். மகாராஷ்டிராவின் கொங்கன் பகுதியில் சிவசேனா அதிக செல்வாக்குடன் இருக்கிறது. கொங்கன் பகுதியை சேர்ந்த நாராயண் ரானேவுக்கு அமைச்சர் பதவி கொடுத்து கொங்கன் பகுதியில் பாஜகவின் செல்வாக்கை அதிகரிக்க அக்கட்சி திட்டமிட்டுள்ளது. நாராயண் ரானே காங்கிரஸ் கட்சியில் இருந்த போது பல முறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியையே சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: மத்திய அமைச்சரவை: தந்தை கவனித்த துறைக்கு மகன்; `புதிய துறைக்கு' அமித் ஷா! - யாருக்கு என்ன இலாகா?
http://dlvr.it/S3N3kW
Friday, 9 July 2021
Home »
» `சிவசேனா,தேசியவாத காங்கிரஸுக்கு பா.ஜ.க நன்றி சொல்லவேண்டும்!’ - மத்திய அமைச்சரவை குறித்து சிவசேனா