மும்பை கிராண்ட் ரோடு பகுதியில் வசிக்கும் பீகாரைச் சேர்ந்த தொழிலதிபர் கும்பர்வாடா என்பவர், கடந்த சில நாள்களுக்கு முன்பு தனது சொந்த ஊருக்குச் சென்றுவிட்டு திரும்பி வந்தபோது வீட்டின் பீரோவிலிருந்த ரூ.12 லட்சம் திருடப்பட்டிருந்தது. இது குறித்து தொழிலதிபர், போலீஸில் புகார் செய்தார். போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர். திருட்டு நடந்த வீடு கட்டடத்தின் 10-வது மாடியில் இருக்கிறது. அதோடு அந்தக் கட்டடத்தில் பராமரிப்புப் பணிகள் நடந்துவந்தன. இதற்காக 6-வது மாடி வரை கட்டடம் முழுவதும் கம்புகள் கட்டப்பட்டு இருந்ததை போலீஸார் கவனித்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Robbery
மேலும் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது ஒரு வாரப் பதிவுகள் மட்டுமே அதில் இருந்தது தெரியவந்தது. இதனால் விசாரணையை வேறு வழிகளில் மாற்றினர். தொழிலதிபரின் உறவினர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. கட்டடத்தில் பராமரிப்புப் பணிகள் தொடங்கப்படுவதற்கு முன்பு தொழிலதிபர் தன்னுடைய வீட்டில் சில பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டிருந்தார். அந்தப் பணிகளை முக்தார் அலி என்பவர் செய்திருக்கிறார். முக்தார் அலிக்குப் பணம் கொடுக்க தொழிலதிபர் தனது பீரோவைத் திறந்து, அதிலிருந்து பணக்கட்டுக்களை வெளியில் எடுத்து எண்ணிக் கொடுத்தார். அதை முக்தார் அலி நேரில் பார்த்திருந்தார். இது குறித்து தொழிலதிபர் போலீஸாரிடம் தெரிவித்தார்.
Also Read: திருவாரூர்: துப்பாக்கி முனையில் நடந்த வங்கிக் கொள்ளை! - கொள்ளையர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை
உடனே முக்தர் அலி எங்கு இருக்கிறார் என்பதைக் கண்டுபிடித்து விசாரித்தபோது திருட்டில் ஈடுபட்டதை அவர் ஒப்புக்கொண்டார். அவர் கட்டடத்தின் பின்புறம் வழியாக 10-வது மாடிக்கு ஏறிச் சென்று, பாத்ரூம் ஜன்னல் வழியாக உள்ளே சென்று, வீட்டுக்குள் இறங்கி பீரோவிலிருந்த நகை, பணம் என 12 லட்சம் மதிப்பிலான பொருள்களை எடுத்துக்கொண்டு வீட்டின் கதவைத் திறந்து தப்பி சென்றது விசாரணையில் தெரியவந்தது. ரூ.7 லட்சம் மதிப்பிலான பொருள்கள் மட்டும் முக்தரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.
http://dlvr.it/S5sjjg
Wednesday, 18 August 2021
Home »
» மும்பை: 10-வது மாடியில் நடந்த கொள்ளை; பின்புறமாக ஏறிச் சென்ற `ஸ்பைடர்மேன்' திருடன்!