கொரோனாவால் ஆயிரக்கணக்கானோர் மும்பையில் வேலை வாய்ப்புக்களை இழந்து தவிக்கின்றனர். மும்பையில் புறநகர் ரயில் இருந்தால் மட்டுமே வேலைக்குச் செல்ல முடியும். ஆனால் இப்போது புறநகர் ரயிலில் பொதுமக்கள் பயணம் செய்ய தடைவிதிக்கப்பட்டிருப்பதால் மக்கள் மும்பைக்குள் சென்று வேலை செய்ய முடியாமல் இருக்கின்றனர். மும்பை அருகிலுள்ள விராரில் புரூக்ளின் பார்க் என்ற அபார்ட்மென்ட்டில் வசித்தவர் ஹரிதாஸ் சஹர்கர் (70). இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.ஹரிதாஸ்
Also Read: `தற்கொலை செய்யப்போவதாக ட்விட்டர் பதிவு' - இளைஞரை மும்பை போலீஸார் காப்பாற்றியது எப்படி?
ஒரு வாரத்துக்கு முன்புதான் அவர்கள் இந்த வீட்டுக்குக் குடிவந்தனர். இந்தநிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்டு ஹரிதாஸ் இறந்துவிட்டார். அவர் இறந்ததை வெளியில் சொன்னால் கொரோனா சோதனை செய்து நம்மைத் தனிமைப்படுத்திவிடுவார்கள் என்று பயந்த சகோதரிகள் வெளியில் யாரிடமும் சொல்லவில்லை. நான்கு நாள்கள் வீட்டிலேயே உடலை வைத்திருந்தனர். உடல், படுக்கை அறையில் இருக்கும். சகோதரிகள் இரண்டு பேரும், அவர்களின் வயதான தாயாரும் முன் அறையில் சமையல் செய்து சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். உடல் அழுக ஆரம்பித்ததால் நாப்தலின் போன்ற பொருள்களைவைத்து துர்நாற்றம் வெளியில் வருவதைக் கட்டுப்படுத்தினர். மேற்கொண்டு வருமானம் இல்லாமல் வாழ முடியாது என்று கருதி சகோதரிகள் இரண்டு பேரும் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தனர். அவர்கள் இரண்டு பேருக்கும் வேலை இல்லை. வருமானத்துக்கும் வழியில்லை. பல இடங்களில் வேலை தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. தந்தை இறந்துவிட்ட நிலையில் இனி எப்படி உயிர்வாழ்வது என்று தெரியாமல் அவர்கள் தற்கொலை செய்துகொள்ளத் திட்டமிட்டனர். சகோதரிகள் இரண்டு பேரும் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளையும் நாப்தலின்களையும் சாப்பிட்டனர். ஆனால் அதில் இரண்டு பேரும் சாகவில்லை. இதனால் கையிலும் உடலின் பல பகுதிகளிலும் கத்தியால் வெட்டிக்கொண்டனர். பின்னர் இருவரும் கடலில் குதித்து தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தனர். ஆனால் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரையால் இருவரும் தூங்கிவிட்டனர். சிறிது நேரம் கழித்து வித்யா என்ற ஒரு சகோதரி எழுந்தார். அவர் தனது மற்றொரு சகோதரியான ஸ்வப்னிலை எழுப்ப முயன்றார். ஆனால் முடியவில்லை. இதனால் தான் மட்டும் ஆட்டோவில் ஏறிச்சென்று அங்குள்ள கடலில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
இந்தநிலையில் அங்குள்ள அர்னாலா கடற்கரையில் தற்கொலை செய்துகொள்ளும் நோக்கத்தில் ஒரு பெண் கடலைச் நோக்கி சென்றார். அங்கு இருந்தவர்கள் அந்தப் பெண்ணை மீட்டபோது அவர் ஸ்வப்னில் என்று தெரியவந்தது. உடனே போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு வரவழைக்கப்பட்டனர். போலீஸார் அந்தப் பெண்ணிடம் விசாரித்தபோது, `எனக்கு வேலை எதுவும் கிடைக்கவில்லை என்றும், பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் நானும் எனது சகோதரியும் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தோம். என் சகோதரி ஏற்கெனவே தற்கொலை செய்துகொண்டார். எனது தந்தையும் நான்கு நாள்களுக்கு முன்பு இறந்துவிட்டார். வீட்டில் அவர் உடல் இருக்கிறது என்று தெரிவித்தார். உடனே கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பெண்ணின் உடலை ஸ்வப்னிலிடம் காட்டியபோது அது தனது சகோதரிதான் என்று தெரிவித்தார். உடனே போலீஸார் விரைந்து சென்று வீட்டில் இருந்த ஹரிதாஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். ஸ்வப்னில், அவரி தாயார் இருவரும் பெண்கள் முகாமுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
http://dlvr.it/S55CPG
Thursday, 5 August 2021
Home »
» மும்பை: இறந்த தந்தையின் உடலை 4 நாள்களாக வீட்டில் வைத்திருந்த சகோதரிகள்; தற்கொலை முயற்சியால் பரபரப்பு