கர்நாடக மாநிலம், மைசூரு சாமுண்டி மலை அடிவாரத்தில் உள்ள லலிதாபுரா பகுதியில், ஆகஸ்ட் 24-ம் தேதி ஆண் நண்பருடன் எம்.பி.ஏ மாணவி ஒருவர் பேசிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர், ஆண் நண்பரை கடுமையாகத் தாக்கி சுயநினைவை இழக்கச் செய்துவிட்டு, மாணவியை காட்டுப் பகுதிக்குள் தூக்கிச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த விவகாரம் கர்நாடகா மட்டுமல்லாது, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ஆலனஹள்ளி போலீஸார், குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைத்து விசாரணையில் இறங்கினர். சம்பவம் நடந்த நேரத்தில் அந்தப் பகுதியிலிருந்த செல்ஃபோன் டவர்களில் பதிவான செல்ஃபோன் நம்பர்களை வைத்தும், கிடைத்த தகவல்களின் அடிப்படையிலும் போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கினர். முதற்கட்டமாக கல்லூரியில் உடன்படிக்கும் மாணவர்கள் யாரேனும் இந்த விவகாரத்தில் ஈடுபட்டிருக்கலாம் என மைசூரு போலீஸார் சந்தேகித்து வந்த நிலையில், இந்த வழக்கில் திடீர் திருப்பமாக திருப்பூர் மாவட்டம் சேவூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 4 பேரும், ஈரோடு மாவட்டம் தாளவாடியில் ஒருவர் என மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Also Read: சென்னை: வீடியோ; மது; கூட்டு பாலியல் வன்கொடுமை! - ஒன்றரை ஆண்டுகளாக சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்
குற்றவாளிகள் 5 பேரும் திருப்பூரில் தங்கியிருந்து கூலி வேலை பார்த்து வந்ததும், சம்பவ தினத்தன்று சம்பவம் நடந்த இடத்திற்கு அருகே கட்டட வேலைக்காகச் சென்று வந்ததும் தெரியவந்திருக்கிறது. வேலையை முடித்துவிட்டு குடிபோதையில் இருந்தவர்கள் கண்ணில் எம்.பி.ஏ மாணவியும், அவருடைய ஆண் நண்பரும் பட்டுள்ளனர். இருவரையும் மிரட்டி பணம் பறிக்கத்தான் முதலில் குற்றவாளிகள் நினைத்து தாக்குதலை ஆரம்பித்துள்ளனர். இதில் எதிர்பாராத விதமாக அந்த ஆண் நண்பர் மயக்கமடைய, குற்றவாளிகளில் ஒருவன் தான் முதலில் பாலியல் வன்கொடுமைக்கான யோசனையைச் சொல்லியிருப்பதாக கூறப்படுகிறது. அதன்பின்னரே அந்தக் கும்பல் எம்.பி.ஏ மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தி்ருக்கிறது. இந்த குற்றச்செயலில் ஈடுபட்டவர்களில் ஒருவர் 17 வயதான சிறுவன் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை.
இந்த விவகாரம் குறித்து விஷயமறிந்த போலீஸாரிடம் பேசினோம். "சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தமிழகத்திலிருந்து கர்நாடகத்திற்கு கட்டட வேலை போன்ற கூலி வேலைகளுக்குச் சென்று வந்துள்ளனர். சம்பவ தினத்தன்று குடிபோதையில் இருந்தவர்கள் அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அவருடைய ஆண் நண்பரையும் கடுமையாக தாக்கியுள்ளனர். சம்பவத்திற்குப் பிறகு குற்றவாளிகள் சத்தியமங்கலம் வனப்பகுதி வழியாக ஈரோடு மாவட்டத்தில் நுழைந்து திருப்பூரில் வந்து தங்கியுள்ளனர். குற்றவாளிகளில் ஒருவர் 17 வயதான சிறுவர். அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை. பாலியல் தொல்லை
இன்னும் இந்த விவகாரத்தில் வேறு யார் யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்பது குறித்து கைதானவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. தற்போது அந்த ஆண் நண்பர் மைசூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பாலியல் வன்கொடுமைக்கு ஆளான எம்.பி.ஏ மாணவி இன்னும் இந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. விரைவில் மீதமுள்ள குற்றவாளிகளும் பிடிபட்டு விடுவார்கள்" என்றனர்.
இதனிடையே இந்த வழக்கு வெற்றிகரமாக முடிந்துவிட்டதாக அம்மாநில உள்துறை மந்திரி அரகா ஞானேந்திரா இன்று தெரிவித்தார்.
http://dlvr.it/S6V6Wd
Saturday, 28 August 2021
Home »
» மைசூரு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் திருப்பம்.. தமிழகத்தில் 5 பேரை கைது செய்த தனிப்படை!