தொழிலதிபர் விஜய் மல்லையா கடன் தொல்லையால் நாட்டைவிட்டுச் சென்று இங்கிலாந்தில் தஞ்சம் புகுந்திருக்கிறார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்திக் கொண்டுவர மத்திய அரசு முயன்றுகொண்டிருக்கிறது. இந்தியாவில் சிறை சரியில்லை, கழிவறை சரியில்லை என்று ஏதேதோ காரணங்களைக் கூறி இந்தியா வருவதை மல்லையா தவிர்த்துவருகிறார். இது தொடர்பான வழக்கு இங்கிலாந்து நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
மும்பையில் கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்காக கிங் ஃபிஷர் ஹவுஸ் செயல்பட்டுவந்தது. மும்பை விமான நிலையத்துக்கு அருகிலிருக்கும் அந்தக் கட்டடத்தை கடன் கொடுத்த வங்கிகள் கையகப்படுத்தி, அதை 2016-ம் ஆண்டிலிருந்து விற்பனை செய்ய முயன்றன.விஜய் மல்லையா
ஆரம்பத்தில் இதை 150 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய திட்டமிட்டனர். இதற்காக நடந்த ஏலத்தில் சொத்து விற்பனையாகவில்லை. அதன் பிறகு பல முறை இந்தச் சொத்தின் மதிப்பைக் குறைத்துக் காட்டி விற்பனை செய்ய முயன்றனர். ஆனாலும் முடியவில்லை. தற்போது நீண்ட இழுபறிக்குப் பிறகு, ஐந்து ஆண்டுகள் கழித்து வெறும் 52 கோடி ரூபாய்க்கு கிங் ஃபிஷர் ஹவுஸ் விற்பனையாகியிருக்கிறது. இந்தக் கட்டடம் மும்பை விலே பார்லே விமான நிலையம் அருகில் இருப்பதால் அதை மேற்கொண்டு இடித்துவிட்டு அதிக உயரத்தில் கட்ட முடியாது. அதற்கு விமானப் போக்குவரத்து ஆணையம் அனுமதி கொடுக்காது.
எனவேதான் பெரும்பாலான நிறுவனங்கள் இதை வாங்க தயக்கம் காட்டிவந்தன. தற்போது ஐதராபாத்தைச் சேர்ந்த நிறுவனம் வாங்கியிருக்கிறது. விஜய் மல்லையாவின் கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் 2012-ம் ஆண்டு நிதி நெருக்கடியால் செயல்பட முடியாமல் போனது. இதனால் கிங் ஃபிஷர் நிறுவனத்துக்குச் சொந்தமான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. சமீபத்தில்கூட விஜய் மல்லையாவின் மதுபான நிறுவனத்தில் விஜய் மல்லையாவுக்கு இருந்த குறிப்பிட்ட ஷேர்களை விற்பனை செய்து கணிசமான அளவு நிதியை கடன் கொடுத்த வங்கிகள் தங்கள் வசப்படுத்தின.
Also Read: விஜய் மல்லையா, நிரவ் மோடி விவகாரம்: வங்கிகளிடம் வந்துசேர்ந்த ₹9,371 கோடி; மீதியும் கிடைக்குமா?
கடந்த ஜூலை 26-ம் தேதி இங்கிலாந்து நீதிமன்றம் விஜய் மல்லையாவுக்குச் சொந்தமான சொத்துகளை அவர் வாங்கிய கடனுக்காக உலகம் முழுவதும் முடக்கலாம் என்று இந்திய வங்கிகளுக்கு அனுமதி கொடுத்திருக்கிறது. இதனால் மல்லையா உலகம் முழுவதும் வாங்கிப் போட்டிருக்கும் சொத்துகளை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தலைமையிலான கடன் கொடுத்த வங்கிகள் முடக்கும் நடவடிக்கையில் இறங்கியிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
http://dlvr.it/S5dn6L
Saturday, 14 August 2021
Home »
» மும்பை: விஜய் மல்லையாவின் `கிங் ஃபிஷர் ஹவுஸ்’... ரூ.52 கோடிக்கு விற்பனை!