செய்யாத ஒரு குற்றத்துக்காக 604 நாள்கள் சிறையில் இருந்துவிட்டு தற்போது வீடு திரும்பியிருக்கிறார் கர்நாடகாவைச் சேர்ந்த ஹரிஷ் பங்கீரா (Harish Bangera).
சவதி அரேபியாவின் தம்மாம் நகரில் ஏசி டெக்னிஷியனாக வேலை பார்த்து வந்த ஹரிஷ் பங்கீராவை 2019, டிசம்பர் 22-ஆம் தேதி சவுதி காவல்துறை கைது செய்திருக்கிறது. சவுதி இளவரசர் முகமது பின் சல்மானைப் பற்றி அவதூறான கருத்துக்களை பேஸ்புக்கில் பதிவிட்டார் எனக்கூறி அவரைக் கைது செய்திருக்கிறார்கள். இதனை அறிந்த அவரது மனைவி சுமனா கர்நாடகாவின் உடுப்பி காவல் நிலையத்தில் அவதூறான கருத்துக்களைப் பகிர்ந்த பேஸ்புக் கணக்கு தன் கணவருடையது இல்லை எனக்கூறி புகார் அளித்துள்ளார்.
சவுதியில் ஹரிஷ் கைது செய்யப்படுவதற்கு மூன்று நாள்கள் முன்பாக, இந்தியாவில் அந்த நேரத்தில் பரபரப்பாகப் பேசப்பட்ட குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் என்.ஆர்.சி.க்கு ஆதரவான சில கருத்துக்களை தன்னுடைய பேஸ்புக் கணக்கில் பகிர்ந்திருக்கிறார். ஆனால், அதன் பின்னர் அது தவறு எனக் கருதி, தான் மன்னிப்பு கேட்கும் காணொலி ஒன்றையும் பதிவிட்டுவிட்டு தனது பேஸ்புக் கணக்கை டீஆக்டிவேட் செய்திருக்கிறார்.அப்துல் சகோதரர்கள்
ஆனால், இவரது பெயரை வைத்தே இன்னொரு பேஸ்புக் கணக்கு தொடங்கப்பட்டு, அதில்தான் சவுதி இளவரசர் தொடர்பான அவதூறான கருத்துகள் பகிரப்பட்டிருக்கின்றன. அதனைக் காரணமாக வைத்து சவுதி காவல்துறையும் அவரை கைது செய்திருக்கிறது. ஹரிஷின் பேஸ்புக் கணக்கைப் போன்றே இன்னொரு கணக்கை யார் தொடங்கினார்கள் எனக் கர்நாடக காவல்துறை விசாரித்து வந்திருக்கிறது. கடந்த வருடம் அக்டோபர் மாதம் தக்ஷின கன்னடா மாவட்டத்தின் மூதபித்ரி (Moodabidri) நகரில் அப்துல் ஹூயெஸ் மற்றும் அப்துல் தூயெஸ் என்ற இரண்டு சகோதரர்களைக் காவல் துறையினர் கைது செய்திருக்கின்றனர்.
Also Read: தாலிபன்களின் கதை - 4 | தாலிபன்களின் ஆட்சி ஏன் கொடூரத்தின் உச்சமாக இருந்தது?!
ஹரிஷ் தனது பேஸ்புக் கணக்கை மூடிய அன்றே, ஹரிஷின் பெயரில் வேறொரு கணக்கை இவர்கள் தொடங்கி சவுதி இளவரசர் தொடர்பான அவதூறுப் பதிவுகளைப் பகிர்ந்திருக்கிறார்கள். குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் என்.ஆர்.சி-க்கு ஆதரவாக ஹரிஷ் பேஸ்புக்கில் பகிர்ந்த கருத்துகளைக் கண்டு கோபமுற்றே இது போன்ற செயலில் ஈடுபட்டோம் எனவும் அவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். அவர்கள் மீது உடனடியாக வழக்குப் பதிவு செய்து அதனை மொழிமாற்றமும் செய்து, அதன் நகலைச் சவுதி அதிகாரிகளுடன் பகிர்ந்திருக்கிறது கர்நாடக காவல்துறை. அதனைத் தொடர்ந்த கடந்த செவ்வாய்க்கிழமை ஹரிஷை விடுதலை செய்திருக்கிறது சவுதி காவல்துறை.குடும்பத்தினருடன் ஹரிஷ் பங்கீரா
இந்நிலையில், நேற்று பெங்களூரூ விமான நிலையம் வந்தடைந்தார் ஹரிஷ் பங்கீரா. செய்யாத குற்றத்துக்காக 604 நாள்கள் சிறையில் இருந்துவிட்டு இந்தியா திரும்பியிருக்கிறார் ஹரிஷ். இவரின் பேஸ்புக் கணக்கைப் போலவே ஒன்றை கணக்கை உருவாக்கிய அப்துல் சகோதரர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.
http://dlvr.it/S5xfTJ
Thursday, 19 August 2021
Home »
» செய்யாத குற்றத்துக்காக 604 நாள்கள் சவுதியில் சிறை... பேஸ்புக் போலிக் கணக்கால் நிகழ்ந்த துயரம்!