நேபாளைச் சேர்ந்த நண்டயல் கேசர் சிங் என்பவர் இந்தியாவில் ஏராளமான கம்பெனிகளைத் தொடங்கி அதில் பொது மக்கள் முதலீடு செய்யும்படி கேட்டுக்கொண்டார். மாதம் ரூ. 7500 வீதம் தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்குக் கட்டினால் 9 -வது வருடத்தில் கட்டிய பணம் மூன்று மடங்காகக் கிடைக்கும் என்று கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தார். இது தவிர சுகாதாரத் திட்டங்களை கேரளாவில் தொடங்கி ரூ.120 கோடி அளவுக்கு மோசடி செய்திருந்தார். இது தொடர்பாக சிங்கிற்கு கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது. அவர் மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கி இருப்பதாகப் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே சம்பந்தப்பட்ட 5 நட்சத்திர ஹோட்டலுக்கு சென்று அங்குள்ள ஊழியர்களிடம் கேசர் சிங் புகைப்படத்தைக் காட்டி விசாரித்தபோது தாங்கள் பார்க்கவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
Also Read: `₹500 வேண்டாம், ₹100 நோட்டா கொடுங்க!' - சில்லறை கேட்பது போல் நூதன மோசடி செய்த கும்பல்; என்ன நடந்தது?போலிஸாருடன் கேசர் சிங்
ஆனால் கிடைத்த தகவல் மிகவும் உறுதியானது என்பதால் ஹோட்டலில் போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். கேசர் சிங் சாப்பிடுவதற்காக வெளியில் வந்தபோது அடையாளம் கண்டுகொண்டு கைது செய்தனர். கேசர் சிங் தன்னை யாரும் அடையாளம் கண்டுகொள்ளக்கூடாது என்பதற்காகத் தனது அடையாளத்தையே மாற்றி இருந்தார். கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க ஹோட்டல் அறைகளை தனது மனைவி பெயரில் பதிவு செய்துள்ளார். போலீஸார் தன்னை கைது செய்யாமல் இருக்க ரூ.50 லட்சம் லஞ்சம் தருவதாகத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, கேரளாவில்தான் அதிக அளவில் கேசர் மோசடி செய்திருப்பதாகக் குற்றப்பிரிவு இணை கமிஷனர் தத்தா நலவாடே தெரிவித்துள்ளார். குஜராத்தை சேர்ந்த கேசர் சிங் 2018-ம் ஆண்டில் இருந்து தலைமறைவாக இருந்தார். 2015-ம் ஆண்டில் இருந்து பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்களை தொடங்கி பொதுமக்களிடம் முதலீடு பெற்றார் என்று நலவாடே தெரிவித்தார். அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் தங்கியிருந்த கேசர் நேபாளத்திற்கு சென்று அங்குள்ள பாஸ்போர்ட் பெற்று இந்தியாவுக்குள் வந்ததாகவும், கேரளா சென்று மருத்துவமனை தொடங்கி சுகாதார திட்டங்களை அறிவித்து மோசடி செய்ததாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
http://dlvr.it/S6JHPG
Wednesday, 25 August 2021
Home »
» ரூ.684 கோடி மோசடி செய்த நேபாள் தொழிலதிபர்; மும்பை ஹோட்டலில் கைதானது எப்படி?