மும்பை அருகிலுள்ள விரார் என்ற இடத்திலுள்ள துலிப் ஹவுஸிங் சொசைட்டி என்ற கட்டடத்தில் ஜன்னல் வழியாகப் புதிதாகப் பிறந்த ஒரு குழந்தை கீழே வீசப்பட்டுக் கிடந்தது. இது குறித்து அந்தக் கட்டடத்தில் வசிப்பவர்கள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் அந்தக் குழந்தையை உடனே மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.குழந்தை கிடந்த இடம்
Also Read: புதுக்கோட்டை: 10-ம் வகுப்பு மாணவி கர்ப்பம்; சிறுமிக்கு பாலியல் தொல்லை - தொடரும் குற்றச் செயல்கள்
குழந்தையைப் பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். குழந்தையை யார் கொண்டு வந்து போட்டது என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். அங்கிருந்த கண்காணிப்பு கேமரா முழுவதையும் ஆய்வு செய்தனர். வெளியிலிருந்து யாரும் உள்ளே வந்து குழந்தையை வீசவில்லை என்று தெரியவந்தது. இதையடுத்து அந்தக் கட்டடத்தில் வசிக்கும் ஒருவர்தான் இந்தக் காரியத்தை செய்திருக்க வேண்டும் என்று போலீஸார் கருதினர். உடனே அந்தக் கட்டடத்திலுள்ள அனைத்து வீடுகளைம் சோதனை செய்தனர். இதில் இரண்டாவது மாடியிலிருக்கும் ஒரு வீட்டு ஜன்னல் கிரில்லில் ரத்தக்கறை படிந்திருந்தது. உடனே அந்த வீட்டைச் சோதனை செய்தபோது உள்ளே சில இடங்களில் ரத்தக்கறை இருந்தது. இதையடுத்து இந்த வீட்டில்தான் குழந்தை பிறந்திருக்க வேண்டும் என்பதை உறுதி செய்த போலீஸார் அந்த வீட்டிலிருக்கும் 16 வயது மைனர் பெண்ணை அழைத்துச் சென்று விசாரித்தபோது அவர்தான் வீட்டின் கழிவறை ஜன்னல் வழியாக குழந்தையை வெளியில் வீசியிருப்பது தெரியவந்தது. அந்தப் பெண் தனது கர்ப்பத்தை மிகவும் லூஸான ஆடைகளை அணிந்து பெற்றோரிடமிருந்து மறைத்துவந்திருக்கிறார். அவரது கர்ப்பத்துக்குக் காரணமான 25 வயது வாலிபரும் போலீஸ் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டார். அந்தப் பெண்ணை பெண்கள் முகாமுக்கு அனுப்பிவைத்த போலீஸார் அவர்மீது வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
http://dlvr.it/S51h1Q
Wednesday, 4 August 2021
Home »
» மும்பை: `காட்டிக்கொடுத்த ரத்தக்கறை!’ - பிறந்த தன் குழந்தையை 7-வது மாடியிலிருந்து வீசிய சிறுமி!