கேரள மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தினமும் புதிய பாதிப்புக்களின் எண்ணிக்கை இருபதாயிரத்தை கடந்து ரிப்போர்ட் ஆகிறது. கடந்த 28-ம் தேதி 22,056 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. 29-ம் தேதி 22,064 பேருக்கும், 30-ம் தேதி 20,772 பேருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு பதிவு ஆனது. கேரளத்தில் நேற்று மட்டும் 20,624 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 112 பேர் மாநிலத்தின் வெளியில் இருந்து வந்தவர்கள். 19,487 பேருக்கு தொடர்பு மூலம் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. சுகாதாரப்பணியாளர்கள் 98 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது.களியக்காவிளையில் கொரோனா பரிசோதனை
கேரளத்தில் அதிகரிக்கும் கொரோனா பரவல் காரணமாக தமிழக எல்லையோர மாவட்டங்கள் உஷார் நிலையில் உள்ளன. இந்த நிலையில் ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் கேரளாவிலிருந்து தமிழ்நாட்டுக்கு வரும் அனைத்து நபர்களுக்கும் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை கட்டாயமாக நடத்தப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். மேலும் கேரளாவில் இருந்து வருபவர்கள் இரண்டு தவணை தடுப்பூசி எடுத்துக்கொண்டதற்கான சான்று காட்டினால் தமிழகத்திற்கு வரலாம் எனவும் தெரிவித்திருக்கிறார்.
ரயிலில் வரும் பயணிகளுக்கும் இந்த நடைமுறை செயல்படுத்தப்படும் எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் கேரளத்தில் இருந்து தமிழகத்துக்கு வருவதற்கு கன்னியாகுமரி, தென்காசி, தேனி என 13 வழிகள் உள்ளதாகவும். அவை ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் போலீஸ் கட்டுப்பாட்டுக்கு வந்துவிடும் எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார்.
Also Read: கொரோனா தளர்வுகள் : `கோவை மாவட்டத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ள கூடுதல் கட்டுப்பாடுகள் என்னென்ன?'குமரி எல்லையில் சோதனை
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள களியக்காவிளை சோதனை சாவடியில் ஏற்கனவே அமைக்கப்பட்ட சுகாதாரத்துறையின் கொரோனா சோதனை மையம் இப்போதும் இயங்கி வருகிறது. கேரளாவில் இருந்து வரும் கேரள பதிவு எண் கொண்ட கார்கள் இ-பாஸ் இருந்தால்தான் அனுமதிக்கப்படுகின்றன. இ பாஸ் இல்லாமல் வரும் வாகனங்களில் உள்ளவர்களிடம் இ பாஸ் போடும்படி அறிவுறுத்தி, அவர்கள் இ பாஸ் போட்ட பிறகுதான் அனுமதிக்கிறார்கள். கேரள பயணிகள் அனைவரின் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்ட பிறகே தமிழகத்துக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
http://dlvr.it/S4qlGk
Sunday, 1 August 2021
Home »
» கொரோனா அலர்ட்: `தமிழக - கேரள எல்லையில் தீவிர கண்காணிப்பு!'