நவிமும்பை ஐரோலியில் வசிப்பவர் ரச்சனா தேஷ்முக்(48). இவருக்கு 15 வயதில் ஒரு மகள் இருக்கிறார். ரச்சனா தனது மகள் படித்து டாக்டராக வேண்டும் என்று விரும்பினார். இதற்காக 15 வயது மகள் வீட்டில் இருந்து நீட் நுழைவு தேர்வுக்கு படித்துக்கொண்டிருந்தார். அடிக்கடி நீட் தேர்வுக்கு படிப்பது தொடர்பாக தாய் மகள் இடையே கருத்து வேறுபாடு ஏற்படுவதுண்டு. சித்தரிப்பு படம்
Also Read: நள்ளிரவு நேரம்... ரத்த வெள்ளத்தில் அம்மா, அப்பா... கதறிய சிறுவன்!- டெல்லியைப் பதறவைத்த கொலை
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரச்சனா படுக்கை அறையில் இறந்து கிடந்தார். அவரது உடலை மீட்டு போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். பிரேத பரிசோதனையில் ரச்சனா கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதனால் யார் கொலை செய்தது என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். கொலை நடந்த மூன்று நாட்களுக்கு முன்புதான் ரச்சனாவிற்கு எதிராக அவரது மகள் போலீஸ் நிலையத்தில் சென்று புகார் செய்துள்ளார். போலீஸார் மாணவியின் பெற்றோரை அழைத்து கவுன்சிலிங் கொடுத்து மாணவியை பெற்றோருடன் அனுப்பி வைத்தது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து இக்கொலையில் ரச்சனாவின் மகளுக்கு தொடர்பு இருக்குமா என்ற கோணத்தில் விசாரணை நடந்தது.
மைனர் பெண்ணை பெண் கான்ஸ்டபிள் ஒருவர் தனது கட்டுப்பாட்டில் எடுத்து நயமாக பேசி விசாரித்தார். ஆரம்பத்தில் எதையும் தெரிவிக்க மறுத்த மைனர் பெண் பின்னர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இது குறித்து மைனர் பெண் நடந்த சம்பவம் குறித்து பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். கொலை நடந்த அன்று தாய் மற்றும் மகள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. "ஏன் மொபைலை பார்த்துக்கொண்டிருக்கிறாய், நீட் தேர்வுக்கு படி" என்று ரச்சனா தனது மகளிடம் தெரிவித்துள்ளார். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில் மைனர் பெண் தனது தாயாரைப் பிடித்து கீழே தள்ளிவிட்டுள்ளார். இதில் ரச்சனாவிற்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. உடனே மைனர் பெண் வீட்டில் கிடந்த கராத்தே பெல்ட்டை எடுத்து வந்து தனது தாயாரை கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். பின்னர் உடலை எடுத்து படுக்கை அறையில் போட்டுவிட்டு ரச்சனாவின் மொபைலில் இருந்து ரச்சனாவின் சகோதரருக்கு மெசேஜ் ஒன்றை அனுப்பினார். அதில் தற்கொலை செய்துகொள்வதாகத் தெரிவித்துள்ளார். மெசேஜ் அனுப்பிய பிறகு படுக்கை அறை கதவைப் பூட்டிவிட்டு மைனர் பெண் தனது மாமாவிற்கு போன் செய்து அம்மா படுக்கை அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டதாகத் தெரிவித்தார். அதனை தொடர்ந்தே மைனர் பெண்ணின் மாமா விரைந்து வந்து இது குறித்து போலீஸாருக்கு தெரிவித்தார். போலீஸார் ஒரு வார தீவிர விசாரணைக்குப் பிறகு இக்கொலையில் துப்பு துலக்கியுள்ளனர். மைனர் பெண்ணை கைது செய்து சிறுவர் சீர்திருத்த சிறைக்கு அனுப்பி வைத்தனர். சொந்த மகளே தனது தாயாரை கராத்தே பெல்ட்டால் கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் பெற்றோர் மத்தியில் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
http://dlvr.it/S5MP3g
Tuesday, 10 August 2021
Home »
» மும்பை: மகளின் கராத்தே பெல்ட்; நீட்தேர்வுக்கு படிக்கச் சொன்ன தாய்க்கு நேர்ந்த கொடூரம்!