மும்பையின் கடற்கரை பகுதியில் மாநில தலைமைச் செயலகம் இருக்கிறது. இத்தலைமை ச்செயலகத்திற்கு வெளிப்பகுதிக்கு வந்த ஒருவர் தன்னிடம் இருந்த மண்ணெணய்யை எடுத்து உடல் முழுவதும் ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் அவரை மீட்டு காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். காவல் நிலையத்தில் அவரிடம் விசாரித்த போது அவரது பெயர் சுனில் தாமு என்றும், ஜல்காவ் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் என்றும் தெரிய வந்தது. ஜல்காவ் பகுதியை சேர்ந்த அவர் ஒரு தொழிலதிபர் ஆவார். ஜல்காவ் பகுதியை சேர்ந்த மற்றொரு தொழிலதிபர் மீது சுனில் போலீஸில் புகார் செய்துள்ளார். சித்தரிப்பு படம்
ஆனால் போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவேதான் தான் மன அழுத்தம் காரணமாக தலைமைச் செயலகம் எதிரில் தற்கொலை செய்துகொள்ளலாம் என்று வந்ததாக தெரிவித்தார். இதையடுத்து அவருக்கு போலீஸார் கவுன்சிலிங் கொடுத்து அனுப்பி வைத்தனர். இதற்கு முன்பு மாநில தலைமைச் செயலகத்தில் மாடியில் இருந்து குதித்து சிலர் தற்கொலை செய்துள்ளனர். எனவே தலைமைச் செயலகத்திற்குள் மாடியில் இருந்து கீழே யாரும் குதித்தாலும் அவர்கள் இறந்துவிடாமல் இருக்க வலை அமைக்கபட்டுள்ளது. அந்த வலையிலும் ஒருவர் விழுந்து தற்கொலைக்கு முயன்றார். இதற்கு முன்பு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டவர்கள் அனைவரும் விவசாயிகள் ஆவர். ஆனால் இப்போது தொழிலதிபர் இம்முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இச்சம்பவத்தால் தலைமைச் செயலகத்தில் போலீஸ் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
Also Read: மும்பை: விஜய் மல்லையாவின் `கிங் ஃபிஷர் ஹவுஸ்’... ரூ.52 கோடிக்கு விற்பனை!
http://dlvr.it/S5jnBq
Monday, 16 August 2021
Home »
» மகாராஷ்டிரா தலைமைச் செயலகம்: தொழிலதிபர் தற்கொலை முயற்சியால் பரபரப்பு!