நாடு முழுவதும் சில விஷமிகள் ஆன்லைன் மூலம் கோடிக்கணக்கில் பணத்தை திருடி மோசடி செய்து வருகின்றனர். மோசடிப் பேர்வழிகள் புதுப்புது வழிகளை கண்டுபிடித்து மோசடி செய்கின்றனர். இந்நிலையில் பிடெக் பட்டதாரி ஒருவர் பொதுமக்களின் மொபைல் போன்களை உளவு பார்த்து, அதில் இருக்கும் தகவல்களை திருடும் மொபைல் ஆப் மூலம் மூலம் பொதுமக்களிடம் இருந்து கோடிக்கணக்கணக்கில் பணத்தை திருடியிருக்கிறார். பணத்தை இழந்த பொதுமக்களில் பெரும்பாலானோர் மும்பையை சேர்ந்தவர்கள். அவர்கள் இது குறித்து போலீஸில் புகார் செய்தனர். சைபர் க்ரைம்
பொது மக்களுக்கு வரும் எஸ்.எம்.எஸ்.களில் கே.ஒய்.சி. தகவல்களை அப்டேட் செய்யவில்லையெனில் சிம்கார்டு வேலை செய்யாமல் போய்விடும் என்றும் அது போன்று ஆகாமல் இருக்க எஸ்.எம்.எஸில் உள்ள லிங்கை கிளிக் செய்து கே.ஒய்.சி.தகவல்களை பதிவேற்றம் செய்யலாம் என்று குறிப்பிடப்பட்டு இருக்கும். சிம்கார்டு வேலை செய்யாமல் போய்விடுமே என்ற பயத்தில் சிலர் எஸ்.எம்.எஸ். செய்தியை கிளிக் செய்துவிடுவர். உடனே அதில் இருக்கும் உளவுமொபைல் ஆப் மொபைல் போனில் பதிவிறக்கம் செய்யப்படும்.
Also Read: செல்போனில் ஆபாசப் படம்; சைபர் க்ரைம் போலீஸார் என சிறுவனிடம் பணம் பறிப்பு! - சிக்கியது எப்படி?
அந்த மொபைல் ஆப் போனில் உள்ள அனைத்து தகவல்களையும் உளவு பார்த்து அந்த ஆப்களை ஆபரேட்ட் செய்யும் நபருக்கு அனுப்பும். அந்த நபர்கள் மொபைல் போன் தகவல்களை பயன்படுத்தி பொதுமக்களின் பணத்தை திருடி வந்தனர். இது தொடர்பாக போலீஸார் மட்டுமல்லாமல் மொபைல் போன் நிறுவனங்களுக்கும் பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்தன. இதையடுத்து இது குறித்து மும்பை பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்சில் உள்ள சைபர் பிரிவு போலீஸார் விசாரணையில் இறங்கினர். விசாரணையில் மும்பையை சேர்ந்த நபர் இந்த மோசடியில் ஈடுபடவில்லை என்று தெரிய வந்தது.
நாட்டின் பல பகுதியில் இருந்து கொண்டு ஒரு கும்பல் தங்களுக்குள் ஒருங்கிணைந்து செயல்பட்டது விசாரணையில் தெரிய வந்தது. மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியை சேர்ந்த பிடெக் பட்டதாரியான சந்தோஷ் குமார்தான் மொபைல் போன் தகவல்களை திருடுவதில் முக்கிய பங்கு வகித்துள்ளார். அவர் தகவல்களை திருடி ஹேக்கர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளார். அவரிடமிருந்து மொபைல் போன் தகவல்களை பெறும் கும்பல் கொல்கத்தா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் இருந்து செயல்பட்டுள்ளது. சந்தோஷ் குமாருடன் சேர்ந்து இந்த மோசடியில் கணேஷ், ஜிதேந்திரா, அசோக்குமார் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். நான்கு பேரும் பிரபல மொபைல் போன் கம்பெனி பிரதிநிதி என்று சொல்லிக்கொண்டு உளவு ஆப் அடங்கிய எஸ்.எம்.எஸ்.களை பொதுமக்களுக்கு மொத்தமொத்தமாக அனுப்பி இருக்கின்றனர். அதில் எஸ்.எம்.எஸ்.சில் உள்ள ஆப்களை பதிவிறக்கம் செய்பவர்கள் மட்டும் பணத்தை இழந்துள்ளனர். கே.ஒய்.சி.ஆப்பை பதிவிறக்கம் செய்யவில்லையெனில் சிம் வேலை செய்யாது என்று சொன்னவுடன் பொதுமக்கள் அவசரப்பட்டு அதனை தங்களது போனில் பதிவிறக்கம் செய்து கொள்கின்றனர். மும்பை போலீஸார் நான்கு பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து இரண்டு லேப்டாப்கள் மற்றும் ஏராளமான மொபைல் போன்கள் பறிமுதல் செய்துள்ளனர். சைபர் க்ரைம்
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஆயிரக்கணக்கானோர் தங்களது பணத்தை இவர்களிடம் இழந்திருப்பது தெரிய வந்தது. அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட மொபைல் மற்றும் லேப்டாப்பை ஆய்வு செய்ததில் இது போன்று மேலும் 3 மோசடிகள் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இக்கும்பலுக்கு வேறு எத்தனை பேருடன் தொடர்பு இருக்கிறது என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். பொது மக்களும் தங்களுக்கு வரும் எஸ்.எம்.எஸ்.களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று போலீஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Also Read: சென்னை: அரசு டாக்டர், பேராசிரியர்... சைபர் க்ரைம் மோசடிக் கும்பலிடம் இவர்கள் சிக்கியது எப்படி?
http://dlvr.it/S5WNGK
Thursday, 12 August 2021
Home »
» எஸ்.எம்.எஸ் மூலம் உளவு ஆப்கள்! - பொதுமக்களிடம் பணத்தை திருடிய கும்பல் சிக்கியது எப்படி?