மும்பையில் போதைப்பொருள் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்து போதைப்பொருள் கடத்தி வரப்படும் சம்பவங்களும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதையடுத்து போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் போதைப்பொருள் வியாபாபாரிகள் மற்றும் சப்ளையர்களுக்கு எதிராக 'ஆபரேசன் ரோலிங் தண்டர்' என்ற பெயரில் நகர் முழுவதும் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் பாலிவுட் பிரபலங்கள் சிக்கி வருகின்றனர். அர்மான் கோலி
Also Read: இன்ஜினீயரிங் கல்லூரி... ஐடி கம்பெனி... கஞ்சா நெட்வொர்க்... பாதை மாற்றிய போதைப் பயணம்!
நடிகர் அர்மான் கோலி வீட்டில் போதைப்பொருள் இருப்பதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே சனிக்கிழமை அதிகாரிகள் அர்மான் கோலி வீட்டில் ரெய்டு நடத்தினர். இரவு 8 மணி வரை நடந்த இந்தச் சோதனையில் போதைப்பொருள் சிக்கியது. இதையடுத்து அவை எப்படி கிடைத்தது என்பது குறித்து விசாரிப்பதற்காக அர்மான் கோலியை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அழைத்துச் சென்றனர். நள்ளிரவு வரை அவரிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள் இன்று அதிகாலை அர்மான் கோலியைக் கைது செய்தனர். போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மண்டல இயக்குனர் சமீர் வாங்கடே தலைமையிலான அதிகாரிகள் இந்தச் சோதனையை நடத்தி கோலியைக் கைது செய்துள்ளனர். கோலிமீது போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள அதிகாரிகள் கோலியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி தங்களது காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். அர்மான் கோலிக்கு போதைப்பொருள் சப்ளை செய்த ஒருவனை சமீபத்தில் அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில்தான் கோலி வீட்டில் ரெய்டு நடப்பட்டு அவர் கைது செய்யப்பட்டதாக இந்த ரெய்டில் பங்கேற்ற ஒரு அதிகாரி தெரிவித்தார். கடந்த ஆண்டு பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலையை தொடர்ந்து போதைப்பொருள் சப்ளையர்களுக்கு எதிராக போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்தனர்.
http://dlvr.it/S6XCxK
Sunday, 29 August 2021
Home »
» போதைப்பொருள் வைத்திருந்த பாலிவுட் நடிகர்; ரெய்டுக்குப்பின் கைது!