மும்பை விமான நிலையத்தை ஜிவிகே நிறுவனம் பராமரித்துவந்தது. ஆனால், அந்த நிறுவனத்திடமிருந்து அதானி நிறுவனம் மும்பை விமான நிலையத்தின் பெரும்பாலான பங்குகளை விலைக்கு வாங்கிவிட்டது. ஆரம்பத்தில் மும்பை விமான நிலையத்தின் பங்குகளை விற்பனை செய்ய ஜிவிகே நிறுவனம் மறுத்தது. பின்னர் நிர்பந்தம் காரணமாக அதானி நிறுவனத்துக்குப் பங்குகளைக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விற்பனை செய்துவிட்டது. கடந்த மாத தொடக்கத்தில் அதானி நிறுவனம், மும்பை விமான நிலையத்தைத் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டது. அதானி நிறுவனம் நாடு முழுவதும் எட்டு விமான நிலையங்களைத் தனது பராமரிப்பில் வைத்திருக்கிறது. மும்பை விமான நிலையத்தைத் தனது கட்டுப்பாட்டில் எடுத்த அதானி நிறுவனம், விமான நிலையத்துக்கு அருகில் மேற்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையிலிருந்த, `சத்ரபதி சிவாஜி விமான நிலையம்’ என்ற பெயர்ப் பலகையை அகற்றிவிட்டு, தனது பெயர்ப் பலகையை வைத்ததாகச் சொல்லப்படுகிறது.
Also Read: மகாராஷ்டிரா: `நேரம் வந்தால் சேனா பவனை இடிப்போம்’ -பாஜக உறுப்பினர் கருத்துக்கு உத்தவ் தாக்கரே பதிலடிஅகற்றப்படும் பெயர் அகற்றப்படுகிறது
இதனால் ஆத்திரமடைந்த சிவசேனாவினர் அந்தப் பெயர்ப் பலகையை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அதோடு ஏற்கெனவே இருந்த, `சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையம்’ என்ற பெயர்ப் பலகையை வைத்தனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அதானி ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங் லிமிடெட், "சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம் என்று இருந்த பெயர்ப் பலகையை மாற்றவில்லை. இதற்கு முன்பு விமான நிலையத்தை நிர்வகித்த நிறுவனத்தின் பெயர்ப் பலகை இருந்தது. அதை அகற்றிவிட்டு அதானி நிறுவனத்தின் பெயர்ப் பலகையை வைத்தோம்" என்று தெரிவித்துள்ளது. ஏற்கெனவே மும்பை சர்வதேச விமான நிலையத்தின் தலைமையகத்தை அதானி நிறுவனம் குஜராத்துக்கு மாற்றப்போவதாகச் செய்தி வெளியானது. அதை அதானி நிறுவனம் மறுத்துள்ளபோதிலும் இந்தச் செய்தியால் சிவசேனாவினர் கொதித்துபோயிருக்கின்றனர். அப்படிப்பட்ட நேரத்தில் அதானி நிறுவனத்தின் பெயர்ப் பலகை விமான நிலையத்துக்கு அருகில் வைக்கப்பட்டதால் மேலும் கொதிப்படைந்துள்ளனர். இதற்கிடையே நவிமும்பையில் புதிய விமான நிலையம் கட்டும் பணி அடுத்த மாதம் தொடங்கும் என்று அதானி நிறுவனம் தெரிவித்துள்ளது.
http://dlvr.it/S4wmJy
Tuesday, 3 August 2021
Home »
» மும்பை விமான நிலையத்தில் நிறுவப்பட்ட அதானியின் பெயர்ப் பலகை; அப்புறப்படுத்திய சிவசேனாவினர்!