மும்பை தானே பகுதியைச் சேர்ந்த அங்குஷ் பவார் என்ற 27 வயது வாலிபர் 3 ஆண்டுகளாக ஒரு பெண்ணைக் காதலித்து வந்தார். மருத்துவமனை ஒன்றில் வார்டு பாயாக வேலை செய்யும் பவார் தனது காதலியைத் திருமணம் செய்ய நினைத்தார். சித்தரிப்பு படம்
ஆனால் அவரது காதலி சில காலம் செல்லட்டும் எனக் கூறியுள்ளார். இது தொடர்பாக அடிக்கடி இருவருக்கும் இடையே தகராறு ஏற்படுவதுண்டு. வழக்கம் போல் மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இந்த சண்டையில் ''உன்னை திருமணம் செய்துகொள்ள முடியாது'' என்றும், ''இறந்து போ'' என்றும் காதலி பவாரிடம் தெரிவித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதனால் மிகவும் மனவேதனை அடைந்த பவார் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார். தற்கொலைக்கு முன் பேஸ்புக் லைவில் தனது காதலி தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டதாகவும், அவரை மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும் தெரிவித்தார். பின்னர் அவர் அவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். அச்சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். காதலி கோபத்தில் சொன்ன வார்த்தையை கேட்டு பவார் தற்கொலை செய்திருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
Also Read: சாதியால் வாழவிடமாட்டார்கள்; நம்மைப் பிரித்துவிட்டார்கள்!'- காதலன் தற்கொலை, உயிர் தப்பிய காதலி
இதே போன்று மும்பையில் வாட்ஸ்ஆப் வீடியோ சாட்டிங்கில் தனது காதலி தன்னை திருமணம் செய்ய மறுத்ததால் 19 வயது வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். கல்லூரியில் படிக்கும் ரஞ்சித் என்ற அந்த வாலிபர் கல்லூரியில் இருந்து வரும் போதே தனது காதலியிடம் வீடியோ காலில் சாட்டிங் செய்து கொண்டு வந்தார். அவரது காதலி வீடியோ காலில் அவரை திருமணம் செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளார். திருமணம் செய்யவில்லை எனில் தற்கொலை செய்து கொள்வேன் என்றும் தெரிவித்தார். அப்படி இருந்தும் அப்பெண் தனது முடிவில் உறுதியாக இருந்தார். இதனால் வீட்டிற்கு வந்த ரஞ்சித் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மொபைலை சோதனை செய்து பார்த்த போதுதான் இந்த விபரம் தெரிய வந்தது.
http://dlvr.it/S5FR2j
Sunday, 8 August 2021
Home »
» காதலி கோபத்தில் சொன்ன வார்த்தை; மும்பை வாலிபர் எடுத்த விபரீத முடிவு!