மற்றொரு வழக்கில் மீரா மிதுன் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 2 நாள் காவலில் வைத்து விசாரிக்க போலீசார் அனுமதி கேட்டுள்ளனர். பட்டியலினத்தவர்கள் குறித்து தவறாக பேசியதாக துணை நடிகை மீராமிதுன் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டம் உட்பட 7 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ''தன்னை யாரும் கைது செய்ய முடியாது'' என அவர் பேசி போலீசாருக்கு தொடர்ந்து சவால் விடுத்து வந்தவரை, கேரளாவில் வைத்து போலீசார் கைது செய்தனர். அவரது நண்பர் சாம் அபிஷேக்கையும் போலீசார் கைது செய்தனர். இதனை தொடர்ந்து இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து, ''சினிமாவில் நடிக்க நிறைய கால் ஷீட் கொடுத்துள்ளேன். அதனால் எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்" என்று மீரா மிதுன் கேட்டிருந்தார். ஆனால் நீதிமன்ற ஜாமீன் கொடுக்க மறுத்து விட்டது. இந்நிலையில் மீண்டும் மற்றொரு வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மீரா மிதுன் தன்னைப் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகள் கூறி வருவதாக ஜோ மைக்கல் பிரவீன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். அதன்படி, எழும்பூர் நீதிமன்றத்தில் மீரா மிதுன் ஆஜர்படுத்தப்பட்டார். ஜோ மைக்கல் பிரவீன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் மீரா மிதுனிடம் 2 நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் போலீசார் மனு அளித்தனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று கூறப்படுகிறது.
http://dlvr.it/S6MxtJ
Thursday, 26 August 2021
Home »
» மீரா மிதுன் மீண்டும் கைது - காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் முயற்சி
மீரா மிதுன் மீண்டும் கைது - காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் முயற்சி
Related Posts:
ராமஜெயம் கொலை வழக்கு: சிபிஐக்கு மாற்ற கோரிய மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு l
தற்கொலை செய்வேன்.. செத்துருவேன்.. "துடைச்சிக்குவேன்" புகழ் சம்பத் மீது பாயுமா வழக்கு?
அதிமுகவை இணைத்திருப்பது எது தெரியுமா?: போட்டு உடைக்கும் எஸ்.வி.சேகர்
ஓ.பி.எஸ் சொல்றதுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாதுங்க... சி.வி. சண்முகம் காட்டம்
திபெத் செல்ல அனுமதி மறுப்பா: சீனாவுக்கு அமெரிக்கா பதிலடி
ஐ.நா., வரைவு அறிக்கையில் இந்திய முன்னுரிமைக்கு இடம்
பிரேசில் அதிபர் போல்சனாரோவுக்கு கொரோனா .. முககவசம் அணிந்தவாறு அறிவித்தார்..!
கனடாவும் மெக்சிகோவும் ரிலாக்ஸ் பண்ணலாம்.. இப்போதைக்கு ட்ரம்ப் ஒண்ணும் செய்யப் போவதில்லை!