மும்பையையொட்டி இரட்டை நகரமாக அமைந்திருக்கும் தானேயில் மாநகராட்சி உதவி கமிஷனராக இருப்பவர் கல்பிதா பிம்பிளே. கல்பிதா மாலையில் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த நேரத்தில் ரோந்துப்பணிக்கு சென்றார். சாலையோரம் இருக்கும் நடைபாதை கடைகளை அகற்றும்படி கூறிக்கொண்டே சென்றார்.அமர்ஜித் யாதவ்
Also Read: ``ஊசிகூட போடாமல் என் மகனின் விரல்களை வெட்டினார்கள்!” - பரிதவிக்கும் பஞ்சாலை தொழிலாளி தம்பதி
அதில் அமர்ஜித் யாதவ் என்ற வியாபாரி மட்டும் நடைபாதை கடையை அகற்ற மறுத்து கல்பிதாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கொரோனா பொதுமுடக்கத்தால் வருமானம் இல்லை என்றும், எனவே தனது கடையை அகற்றக்கூடாது என்று கேட்டுக்கொண்டார். ஆனால் ஒருவருக்காக மட்டும் விலக்கு கொடுக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்த கல்பிதா அவருடன் வந்த மாநகராட்சி ஊழியர்களிடம் யாதவ் கடையை அங்கிருந்து அப்புறப்படுத்தும்படி கேட்டுக்கொண்டார். இதனால் ஆத்திரம் அடைந்த யாதவ் தன்னிடமிருந்த கத்தியால் கல்பிதாவை தாக்க முயன்றார். கல்பிதா தன்னைக் காப்பாற்றிக்கொள்ள கையால் கத்தியைத் தடுக்க முயன்றார். இதில் அவர் இடது கையில் இருந்த இரண்டு விரல்கள் துண்டானது. பாதுகாப்புக்கு நின்றவர்கள் ஓடி வந்து கல்பிதாவைக் காப்பாற்ற முயன்றனர்.
ஆனால் அவர்களையும் யாதவ் தாக்கினார். இதில் பாதுகாவலர் ஒருவரின் விரலும் துண்டானது. ஒரு கட்டத்தில் யாதவ் கத்தியை தனது கழுத்தில் வைத்துக்கொண்டு தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டினார். இதுகுறித்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் ஒருவர் கூறுகையில், "அமர்ஜித் யாதவின் நடைபாதை அகற்றியபோது மிகவும் மூர்க்கத்தனமாக நடந்துகொண்டார். மாநகராட்சி அதிகாரி கல்பிதாவைத் தாக்கியதோடு அவரை மீட்க சென்றவரையும் தாக்கினார். மிகவும் போராடி அவரை மடக்கிப் பிடித்தோம் என்றார். காவல் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட அவர்மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கைவிரல்களை இழந்த கல்பிதா உடனே மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு விரல்களை ஒட்டவைக்க ஆப்ரேஷன் செய்யப்பட்டது. இப்போது அவரது விரலுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்று டாக்டர்கள் தெரிவித்தனர்" என்றார்.
http://dlvr.it/S6fqSp
Tuesday, 31 August 2021
Home »
» நடைபாதை கடைகள் அகற்றம்; பெண் உதவி கமிஷனரின் விரல்களை வெட்டிய வியாபாரி!