நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா ஆபாச வீடியோ தயாரித்து மொபைல் ஆப்களில் வெளியிட்டு கோடிக்கணக்கில் சம்பாதித்த வழக்கில் மும்பை போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் தனது மொபைல் ஆப்களில் இருக்கும் வீடியோக்களைப் போன்ற வீடியோக்கள் அமேஸான் பிரைம், நெட்பிளிக்ஸ் போன்ற ஒடிடி தளங்களில் அதிகமாக காணப்படுவதாகவும், எனவே தன்னை கைது செய்தது சட்டவிரோதமானது என்று கூறி மும்பை உயர் நீதிமன்றத்தில் ராஜ் குந்த்ரா மனுத்தாக்கல் செய்தார். இம்மனு கடந்த சில நாட்களாக நீதிபதி அஜய் கட்கரி முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மீண்டும் இம்மனு விசாரணைக்கு வந்த போது ராஜ் குந்த்ராவின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்ததோடு சட்டத்துக்கு உட்பட்டே ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். ராஜ்குந்த்ரா
அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அருணா பாய் போலீஸ் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்தார். அதில், `போலீஸார் ராஜ் குந்த்ராவின் அலுவலகத்தில் சோதனையிடுவதற்காக சென்ற போது ராஜ் குந்த்ரா தனது வாட்ஸ் ஆப்பில் இருந்த உரையாடல்களை அழித்துக்கொண்டிருந்தார். எனவே சாட்சியங்களை அழித்ததாக மற்றொரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
`இதற்கு முன்பு கடைசியாக இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போதும், போலீஸார் சோதனை நடத்தியபோதும் அல்லது போலீஸ் காவலை நீட்டிக்க அனுமதி கேட்ட போதும் போலீஸார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ராஜ் குந்த்ரா சாட்சிகளை அழிக்க முயன்றது தொடர்பாக எதுவும் தெரிவிக்கவில்லை என்று ராஜ் குந்த்ரா சார்பாக ஆஜரான வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
Also Read: "அவை ஆபாச வீடியோக்கள் அல்ல!"- கணவர் ராஜ் குந்த்ராவுக்கு ஆதரவாக ஷில்பா ஷெட்டி வாக்குமூலம்!
அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அருணா, `ராஜ் குந்த்ராவின் மொபைல் ஆப்களில் இருந்து அதிகப்படியான ஆபாச வீடியோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 41ஏ சட்டப்பிரிவின் கீழ் போலீஸார் ராஜ் குந்த்ரா மற்றும் ரேயான் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். ரேயான் அதனை ஏற்றுக்கொண்டுள்ளார். ஆனால் ராஜ் குந்த்ரா அதனை ஏற்கவில்லை. அவர் விசாரணைக்கு ஆஜராகாத காரணத்தால்தான் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவித்தார். இம்மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி 41ஏ சட்டப்பிரிவின் கீழ் அதிகபட்சமாக குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை கொடுக்க முடியும் என்று தெரிவித்தார். ராஜ் குந்த்ரா சார்பாக ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
http://dlvr.it/S5CfW0
Saturday, 7 August 2021
Home »
» `சட்டத்துக்கு உட்பட்டே கைது!’ - ராஜ் குந்த்ரா மனுவை தள்ளுபடி செய்த மும்பை உயர் நீதிமன்றம்