மும்பை மாநகராட்சிக்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் நடக்க இருக்கிறது. இத்தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோம் என மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவர் நானா பட்டோலே தெரிவித்தார். இது தொடர்பாக சிவசேனாவுக்கும், நானா பட்டோலேயிக்கும் இடையே கருமையான வார்த்தைப் போர் ஏற்பட்டது. தற்போது அடுத்த கட்டமாக காங்கிரஸ் தலைவர்கள் மாநகராட்சி தேர்தலைச் சந்திக்க இப்போதே தயாராகிவிட்டனர். இத்தேர்தலுக்காக கட்சி தலைமை உயர்மட்டக் கமிட்டி ஒன்றை அமைத்திருக்கிறது. இக்கமிட்டி தேர்தலை எவ்வாறு எதிர்கொள்ளலாம் என்பது குறித்து ஒவ்வொருவரிடமும் கருத்து கேட்டிருந்தது.
Also Read: மகாராஷ்டிரா: வெள்ளத்தால் பாதித்த மக்கள்; ஒரு லட்சம் லிட்டர் பால் பாக்கெட் அனுப்பும் சோனு சூட்!கணேஷ் குமார்
இதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை அனுப்பியிருந்தனர். மும்பை காங்கிரஸ் செயலாளராக இருக்கும் கணேஷ் குமார் யாதவ் கட்சியின் தேர்தல் கமிட்டிக்கு அனுப்பி இருக்கும் பரிந்துரை சற்று வினோதமாக இருக்கிறது. அந்த அறிக்கை எப்டியோ வெளியில் கசிந்துவிட்டது. அதில் மும்பை மாநகராட்சி தேர்தலை எதிர்கொள்ள மேயர் பதவிக்கு நடிகர் சோனுசூட், ரிதேஷ் தேஷ்முக் அல்லது மிலிந்த் சோமனை நிறுத்தலாம் என்று தெரிவித்துள்ளார். இளைஞர்களைக் கவரவேண்டுமானால் இவர்களை மேயர் பதவிக்கு முன்னிறுத்தவேண்டும் என்று தெரிவித்துள்ளார். அவர் கட்சியின் தேர்தல் கமிட்டிக்கு அனுப்பிய அறிக்கை எப்படி வெளியானது என்று தெரியவில்லை என கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். இதுகுறித்து தமிழரான கணேஷ் குமாரிடம் கேட்டதற்கு கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். தேர்தல் கமிட்டியில் மாநில தலைவர் நானா பட்டோலே, முன்னாள் முதல்வர் அசோக் சவான், பிருத்வி ராஜ்சவான், பாய் ஜக்தாப் போன்றோரும் உறுப்பினர்களாக இருக்கின்றனர். இதற்கு முன்பு நடிகை ஊர்மிளாவை காங்கிரஸ் கட்சி மக்களவை தேர்தலில் களம் இறக்கியது. ஆனால் அதில் ஊர்மிளா தோல்வியைத் தழுவினார். இப்போது அவர் சிவசேனாவிற்கு சென்றுவிட்டார்.
http://dlvr.it/S6D3qz
Tuesday, 24 August 2021
Home »
» `நடிகர் சோனு சூட் - ஐ மும்பை மேயர் பதவிக்கு நிறுத்தவேண்டும்' -மும்பை காங்கிரஸுக்கு கோரிக்கை!