மும்பையில் ஆட்டோ டிரைவராக இருப்பவர் லால்ஜி பால். இவர் இரண்டு நாட்களுக்கு முன்பு கழுத்து அறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் தெருவில் கிடந்தார். பொதுமக்கள் இதுகுறித்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். அவரை மீட்டு போலீஸார் சயான் மாநகராட்சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். கழுத்து அறுபட்டிருந்ததால் அவரால் சரியாகப் பேச முடியவில்லை. இதையடுத்து போலீஸார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து சம்பவம் நடந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். சித்தரிப்பு படம்
Also Read: கழுத்தை இறுக்கிய நைலான் கயிறு; காயத்தோடு தவித்த காட்டுமாடு; மீட்டு உதவிய வனத்துறை!
ஆனால் எந்தவித துப்பும் துலங்கவில்லை. மயக்க நிலையில் இருந்த லால்ஜி மயக்கம் தெளிந்து போலீஸாருக்கு எழுத்து மூலம் பதிலளித்தார். அதில் லால்ஜி தன்னைத் தானே கழுத்தை அறுத்துக்கொண்டது தெரியவந்தது. லால்ஜிக்கு மும்பையில் சில சொத்துக்களும், ரொக்கப் பணமும் இருக்கிறது. ஆனால் அவர் குடும்பத்தோடு வசிக்கவில்லை. இதனால் யாராவது தனது சொத்துக்காக தன்னைக் கொலை செய்துவிட்டு தனது சொத்துக்களை அபகரித்துக் கொள்ளக்கூடும் என்ற அச்சத்தில் வாழ்ந்துவந்தார். இதற்காக எப்போதும் ஆட்டோவில் கத்தி வைத்திருப்பாராம். அதோடு ஆட்டோவின் இறுக்கையில் தனது வாரிசு யார் என்பதையும் எழுதி வைத்திருக்கிறார். எப்போதும் இரவு நேரத்தில் பயத்தில் தனது ஆட்டோவில்தான் உறங்கி எழுந்துள்ளார். இது போன்று சம்பவத்தன்றும் லால்ஜி ஆட்டோ ஓட்டிக்கொண்டிருக்கும் போது யாரோ தன்னை பின் தொடர்வதாக நினைத்தார். எனவே யாராவது தன்னை கொலை செய்துவிடக்கூடும் என்ற அச்சத்தில் தன்னிடமிருந்த கத்தியை எடுத்து தனக்கு தானே கழுத்தில் அறுத்துக்கொண்டுள்ளார். அவர் முழுமையாக குணமடைந்த பிறகு இது குறித்து மேற்கொண்டு விசாரணை நடத்த போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
http://dlvr.it/S5pk3b
Tuesday, 17 August 2021
Home »
» 'யாரோ பின்தொடர்கிறார்கள்' - பயத்தில் தன் கழுத்தை தானே அறுத்துக்கொண்ட ஆட்டோ டிரைவர்