அ.தி.மு.க ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த வேலுமணி சம்பந்தப்பட்ட இடங்களில் நேற்று முன்தினம் லஞ்ச ஒழிப்பு போலீஸார் ரெய்டு நடத்தினர். கோவையில் 42 இடங்கள் உள்பட தமிழ்நாடு முழுவதும் 60 இடங்களில் ரெய்டு நடந்தது. கோவை கே.சி.பி நிறுவனம் சம்பந்தப்பட்ட 3 இடங்களில் நேற்றும் ரெய்டு தொடர்ந்தது.வேலுமணி
Also Read: “என்னைத் தொட முடியாது!” - சவால்விடும் வேலுமணி
ஆனால், வேலுமணி சம்பந்தப்பட்ட ஒரு இடத்தில் மட்டும் ரெய்டு நடக்கவில்லை. அது மிகவும் ரகசியமான இடம் என்று நமக்கு பிரேத்யகமாக ஓர் தகவல் கிடைத்தது.
தமிழ்நாடு – கேரளா எல்லையான ஆனைக்கட்டி அருகே வேலுமணி மற்றும் அவர்கள் சம்பந்தப்பட்டவர்கள் அடிக்கடி வந்து செல்லும் பிரமாண்டமான பண்ணை வீடு அங்கு இருக்கிறது என்று தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அங்கு நேரில் செல்ல முடிவெடுத்தோம். எல்லையில் இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றிதழை காண்பித்து கேரளாவுக்குள் நுழைந்தோம்.கேரளா பண்ணை வீடு மின்வேலி தடுப்பு
கேரளா மாநிலத்துக்குள்தான் அந்த பண்ணை வீடு உள்ளது. எல்லையை கடந்ததும் சற்று தூரத்துக்கு மலையில் ஏறுகிறது அந்தப் பாதை.
மிகவும் குறுகலாக, மேடும் பள்ளமுமாக சென்றது அந்த சாலை. சிறிது தூரத்தில் மின்சார வேலி தடுப்புடன் ஓர் பிரமாண்ட கட்டடம் தெரியவந்தது. அதுதான் அந்த பண்ணை வீடு என்று உறுதி செய்ய விசாரணை செய்தோம். அந்தப் பகுதியில் உள்ள சிலரிடம் கேட்டபோது, “அந்தப் பெரிய வீடுங்களா..? அது எஸ்.பி. வேலுமணி வீடு. மந்திரி வீடு.. வேலுமணி & கோ கேரளா பண்ணை வீடு
அடிக்கடி குடும்பத்தோட வருவாருங்க” என்றனர். வீக் எண்ட், பண்டிகை நாள்களில் வேலுமணி மற்றும் சந்திரசேகர் உள்ளிட்டோர் குடும்பத்துடன் அங்கு செல்வார்கள்.
இந்தத் தகவல் கோவையில் இருக்கும் இவரது நெருங்கிய வட்டாரங்கள் மற்றும் கட்சியினருக்கு நன்கு தெரியும். பல முக்கிய விஷயங்கள் அங்குதான் நடந்துள்ளன.வேலுமணி & கோ கேரளா பண்ணை வீடு
அந்த பண்ணை வீட்டில் பல ரகசியங்கள் பொதிந்துள்ளன” என்கின்றனர் இந்த பண்ணை வீட்டை நன்கு அறிந்த சிலர்.
http://dlvr.it/S5VLZn
Thursday, 12 August 2021
Home »
» ரெய்டில் சிக்காத வேலுமணி & கோ வின் கேரளா பண்ணை வீடு! - நேரடி ரிப்போர்ட்