டெல்டா கொரோனாவுக்கு எதிராக கோவிஷீல்ட் - பைசர் தடுப்பூசியின் செயல்திறன்கள் குறைகிறது என ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனா டெல்டா திரிபு உலகம் முழுவதும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், பைசர் மற்றும் அஸ்ட்ரா ஜெனிகா (இந்தியாவில் கோவிஷீல்டு) தடுப்பூசிகளின் ‘டெல்டா திரிப்புக்கு’ எதிரான செயல்திறன் குறித்த கேள்வி, கடந்த சில வாரங்களாகவே வலுத்து வந்தது.பல நாடுகளில் இவை இரண்டின் செயல்திறனும் குறைவதாகக் கூறப்பட்டு, பூஸ்டர் டோஸ்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்நிலையில் இதுதொடர்பாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இவை இரண்டும் ஆல்பா திரிபுக்கு செயல்படுவது போல மிகச்சிறந்த எதிர்ப்பை டெல்டா திரிபுக்கு எதிராக காட்டவில்லை என்பது தெரியவந்துள்ளது. இருப்பினும் இவ்விரண்டு தடுப்பூசியுமே ஓரளவு நோய் எதிர்ப்பு ஆற்றலை கொடுக்கிறது என்றும், இவற்றில் இரு டோஸூம் எடுத்துக்கொண்டவர்களுக்கு நோய் தடுக்கப்படுகிறது என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஏற்கெனவே கொரோனாவிலிருந்து மீண்ட நபரெனும்பட்சத்தில், அவர் தடுப்பூசி எடுத்துக்கொள்ளும்போது அவருக்கு நோய்த்தடுக்கப்படும் விகிதம் அதிகரிப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதிலும், இரு டோஸ் கோவிஷீல்டுடன் ஒப்பிடுகையில், இரு டோஸ் பைசர் தடுப்பூசி குறைவான ஆற்றலையே வெளிப்படுத்துவதாக கூறப்பட்டுள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகளில் பூஸ்டர் டோஸ் அங்கீகரிக்கப்பட்டிருக்கும் நிலையில், அங்கு அதிகம் விநியோகப்பட்டிருக்கும் பைசர் தடுப்பூசி மீதான இந்த ஆய்வு முடிவு பூஸ்டர் டோஸின் அவசியத்தை அதிகப்படுத்தும் நோக்கில் அமைந்துள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த ஆய்வில், 18 வயதுக்கு மேற்பட்ட 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருந்துள்ளனர் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
http://dlvr.it/S61bpt
Friday, 20 August 2021
Home »
» டெல்டா கொரோனாவுக்கு எதிராக கோவிஷீல்ட் - பைசர் தடுப்பூசியின் செயல்திறன்கள் குறைகிறது: ஆய்வு