மும்பையில் கணபதி விழா மற்றும் சுதந்திர தின விழாவையொட்டி போலீஸார் பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த நிலையில் திடீரென நேற்று நள்ளிரவு மர்ம நபர் ஒருவர் மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம், தாதர், பைகுலா ரயில் நிலையங்கள், நடிகர் அமிதாப்பச்சன் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாகவும், அவை வெடித்து சிதறும் என்று கூறிவிட்டு போனை வைத்துவிட்டார். உடனே போலீஸார் உஷார் படுத்தப்பட்டனர். மும்பை ரயில் நிலையம்
நகர் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. நான்கு இடங்களுக்கும் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் சென்று போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். தீவிர சோதனை நடத்தியதில் எந்த வித வெடிகுண்டும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதையடுத்து வந்த செய்தி புரளி என்று தெரிய வந்தது. போன் செய்த நபர் யார் என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை வருகின்றனர். தானே மாவட்டம் மும்ப்ரா பகுதியை சேர்ந்த அவர்களில் ஒருவர் குடிபோதைக்கு அடிமையானவர். அவர்தான் இந்த வெடிகுண்டு மிரட்டலை விடுத்திருந்தான். அவருடன் இருந்த மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்கள் குடிபோதையில் இது போன்று செய்திருக்கலாம் என்று தெரிகிறது.
Also Read: மும்பை: புறநகர் ரயில் விவகாரம்; சிவசேனா அரசு சர்வாதிகாரத்துடன் நடந்து கொள்வதாக பாஜக குற்றச்சாட்டு!
கடந்த சில நாட்களுக்கு முன்பு மும்பையில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த வெடிகுண்டு மிரட்டலும் இரவில்தான் விடுக்கப்பட்டது. இதையடுத்து இந்த வெடிகுண்டு மிரட்டலிலும் தற்போது பிடிபட்டவர்களுக்கு தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
http://dlvr.it/S5ByH1
Saturday, 7 August 2021
Home »
» அமிதாப்பச்சன் வீடு, ரயில் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்! -குடிபோதையிலிருந்த இருவர் கைது